Home > அரசியல் > “வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்கள் தேவை” – மு.க ஸ்டாலின்

“வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்கள் தேவை” – மு.க ஸ்டாலின்

தமிழகத்தில் வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டங்களை அரசு அறிவிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேலை இழப்பு, வருமான இழப்பு என்ற இரட்டிப்புக் கொடுமைகளில் மக்கள் சிக்கி திணறி கொண்டிருப்பதை முதலமைச்சர் கண்டுகொள்ளவில்லை.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் 5 ஆயிரம் ரொக்கம் கொடுத்து உதவ வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும் அரசு கமிஷன் அடிக்க உதவும் டெண்டர்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது.

பொருளாதாரம் மீட்புக்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் திரு.ரங்கராஜன் தலைமையிலான குழு அறிக்கையை அளித்து ஒரு மாதத்தை நெருங்கி விட்டது.

ஆனால் அறிக்கையை வெளியிடவில்லை, நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசின் தோல்வியை திசை திருப்ப புரிந்துணர்வு ஒப்பந்த விளம்பரங்கள் மட்டும் வெளியிடப்படுகிறது.

இனியும் ஏமாற்றாமல் கிராமப்புறங்களில் உள்ள வேலைவாய்ப்புகளை பெருக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

பிரத்தியேகமாக ஒரு நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும்.

சாலை ஓரத்திலேயே மற்றவர்களின் மனதில் விபரீதமான எண்ணங்கள்; இதுதான் காலத்தின் குறி என்று பேரறிஞர் அண்ணா அன்று சொன்னதை மறந்து விடக்கூடாது” என குறிப்பிட்டுள்ளார்.

You may also like
நீட் தேர்வு குறித்து ஸ்டாலின் அறிக்கை
தாயார் தவுசாயம்மாள் மறைவு : முதல்வருக்கு நேரில் ஆறுதல் கூறுகிறார் மு.க.ஸ்டாலின்
அண்ணா பல்கலைக்கழக
உதயநிதி ஸ்டாலின் தலைமையில் போராட்டம்..
செம்மொழி பட்டியலில் தமிழ் சேர்ப்பு; மு.க ஸ்டாலின் வரவேற்பு

Leave a Reply