Home > அரசியல் > பாஜகவினால் தென்னிந்தியாவை நெருங்க முடியாது – தினேஷ் குண்டுராவ்

பாஜகவினால் தென்னிந்தியாவை நெருங்க முடியாது – தினேஷ் குண்டுராவ்

பாஜகவினால் தென்னிந்தியாவை நெருங்க முடியாது; அதற்கு தினேஷ் குண்டுராவ்

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே மத்திய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள மத்திய பாஜக அரசின் கீழ் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களும், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மீதான வன்முறைகளும் அதிகரித்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் குற்றஞ்சாட்டினர்.

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் மேலிட தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் பங்கேற்ரார்.

ஆயிரத்திற்கும் அதிகமான காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதால் வாலாஜா சாலையில் போக்குவரத்து சிறிதுநேரம் நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் குண்டுராவ், “முருகனுக்கு யாத்திரை நடத்தும பா.ஜ.க, இளைஞர்களின் வேலைவாய்ப்பு, பெண்களின் உரிமைகளுக்கு, விவசாயிகளின் பிரச்னைக்காக ஏன் யாத்திரை நடத்தவில்லை.

மக்களை குழப்பவே இந்த முருகன் யாத்திரை. பிரிவினையை உண்டாக்க பா.ஜ.க முயல்கிறது. பா.ஜ.க வால் என்றும் தென்னிந்தியாவை நெருங்க முடியாது. தென்னிந்தியா முன்பாகவே பா.ஜ.க வின் எல்லை முடிகிறது” எனக் கூறினார்.

You may also like
அகமது பட்டேல் (71) கொரோனா பாதிப்பால் காலமானார்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது பட்டேல் காலமானார்
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தருண் கோகாய் உயிரிழப்பு…
தொகுதிகள் ஒதுக்கீட்டில் பேரம் பேசாது என குண்டுராவ்
தொகுதிக்காக திமுகவிடம் பேரம் பேசல.. – குண்டுராவ்
பாஜக கூட்டணி முன்னிலை

Leave a Reply