Home > அரசியல் > திமுக பொதுசெயலாளராக துரைமுருகன் வெளியிட்ட முதல் அறிவிப்பு

திமுக பொதுசெயலாளராக துரைமுருகன் வெளியிட்ட முதல் அறிவிப்பு

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளராக நா.புகழேந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, துணைப் பொதுச் செயலாளராக பதவி உயர்வு பெற்றார். இதனையடுத்து, புதிய மாவட்டச் செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று (செப்டம்பர் 18) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “துணைப் பொதுச் செயலாளராக பொன்முடி தேர்ந்தெடுக்கப்பட்டதால், ஒருவருக்கு ஒரு பதவி என்கிற அடிப்படையில் தனது மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து விலகிக்கொண்டார்.

இதனையடுத்து, விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளராக நா.புகழேந்தி நியமிக்கப்படுகிறார். அதேபோல மாவட்ட அவைத் தலைவராக ம.ஜெயச்சந்திரனும், துணைச் செயலாளராக டி.என்.முருகனும் நியமிக்கப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

பொதுச் செயலாளர் பதவியை ஏற்ற பிறகு துரைமுருகன் வெளியிடும் முதல் அறிவிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
பொன்முடிக்கு நெருக்கமானவரான புகழேந்தி கடந்த ஆண்டு நடந்த விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்டவர். விழுப்புரம் மாவட்டம் அத்தியூர் திருவாதியைச் சேர்ந்தவரான புகழேந்தி, 1973ஆம் ஆண்டிலிருந்து திமுக உறுப்பினராக இருந்து வருகிறார். கிளைச் செயலாளர், ஒன்றியச் செயலாளர், பொதுக் குழு உறுப்பினர், விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளர், அவைத் தலைவர் என கட்சியில் பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார்.

You may also like
உதயநிதி ஸ்டாலின் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
கலவரம் செய்தால்,கோமியம் குடித்தல்,இதில் புதிய இணைப்பு – உதயநிதி ஸ்டாலின்
நீட் தேர்வு குறித்து ஸ்டாலின் அறிக்கை
தாயார் தவுசாயம்மாள் மறைவு : முதல்வருக்கு நேரில் ஆறுதல் கூறுகிறார் மு.க.ஸ்டாலின்
“வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்கள் தேவை” – மு.க ஸ்டாலின்

Leave a Reply