Home > அரசியல் > “7 பேர் விடுதலையில், ஆளுநர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” – முதல்வர்

“7 பேர் விடுதலையில், ஆளுநர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” – முதல்வர்

பேராறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் அதிகாரத்தில் இருப்பதால், அவர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

கோவையில் இதுதொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர், 2000ஆம் ஆண்டில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அமைச்சரவையில் 7 பேரின் கோரிக்கைகளில் நளினிக்கு ஆயுள் தண்டனையும், தவிர்த்து மற்ற 6 பேரையும் ஏற்கனவே நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை நடைமுறைப் படுத்தலாம் என முடிவெடுத்ததாகவும் கூறினார்.

ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 7 பேரின் விடுதலையை நடைமுறைப்படுத்த விரும்பியதால், அதிமுக அரசு தான் அமைச்சரவையில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறினார்.

மேலும், அதிமுக அரசு தான் தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் 7 பேரின் விடுதலைக்கு குரல் கொடுத்ததாக கூறிய முதலமைச்சர், இந்த விவகாரத்தில் ஆளுநர் அதிகாரத்தில் உள்ளதால் அவர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

You may also like
அதிமுக – பாஜக வெற்றிக் கூட்டணி தொடரும்
நவம்பர் 10, 11 தேதிகளில் முதல்வர் சுற்றுப் பயணம்
தமிழக பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு
மதுரையில் தேவர் சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மரியாதை

Leave a Reply