Home > அரசியல் > நிவர் நிவாரண பணிகள் – கடலூரில் முதல்வர் சென்னையில் துணை முதல்வர்

நிவர் நிவாரண பணிகள் – கடலூரில் முதல்வர் சென்னையில் துணை முதல்வர்

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை தலைவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

வங்கக் கடலில் உருவான நிவர் புயல் நேற்று இரவு 11.30 மணி முதல் கரையைக் கடக்கத் துவங்கி இன்று அதிகாலை 2.30 மணிக்கு முழுவதுமாக கரையைக் கடந்தது.

இதன் காரணமாக சென்னையில் இரண்டு நாட்களாக மழை பெய்ததால் வீடுகளுக்கு தண்ணீர் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது.

சாலைகளில் தண்ணீர் ஆறுபோல பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்தும் முடங்கியது.

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (நவம்பர் 26) கடலூரில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய கொட்டும் மழையிலும் சென்னையிலிருந்து காரில் புறப்பட்டுச் சென்றார்.

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தரமணி பெரியார் நகர் பகுதியில், நிவர் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், நிவர் புயல் காரணமாக பாதுகாப்பு கருதி, வேளச்சேரி – அம்பேத்கர் நகர் பகுதி நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினேன்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் உள்ளிட்ட வடசென்னை பகுதிகளை நேற்று பார்வையிட்ட ஸ்டாலின், பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

அதேபோல இன்றும் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் நிரம்பியுள்ள அடையாறு மற்றும் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சைதாப்பேட்டையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

திமுகவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சென்னை சேப்பாக்கம் மற்றும் சிந்தாதிரிப்பேட்டை பகுதிகளில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இளைஞரணி சார்பில் நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

You may also like
புதுச்சேரி முதல்வர் வேட்பாளராகும் ஜெகத்ரட்சகன் பதறும் காங்கிரஸ்!
முஸ்லிம் லீக் கேட்ட 16 க்கு மு.க.ஸ்டாலின் பதில் என்ன?
திமுக எதிர்ப்பால் குப்பை கொட்டும் வரியை வாபஸ் பெற்றது மாநகராட்சி
இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் மீண்டும் சந்தானம்

Leave a Reply