Home > அரசியல் > மதிகெட்ட நாயும், பன்றியோடு சேர்ந்த தந்தியும்!

மதிகெட்ட நாயும், பன்றியோடு சேர்ந்த தந்தியும்!

2004ஆம் ஆண்டு நான் சென்னை தினமணியில் சேர்ந்தப்போ, பொறுப்பாசிரியரா எம்.சந்திரசேகரனும், தலையங்க பக்க ஆசிரியரா ராயப்பாவும் இருந்தாங்க. அப்போவெல்லாம் தினமணி கார்ட்டூன்கள் பிரச்சனைகள் தொடர்பாகத்தான் இருக்கும். தனி மனித தாக்குதல்களை ஆசிரியர்கள் அனுமதிக்க மாட்டார்கள். துக்ளக் சோ குருமூர்த்தியிடம் சொல்லி, குருமூர்த்தி தினமணி ஓனர்கிட்ட சொல்லி தினமணியில் கார்ட்டூனிஸ்ட்டாகச் சேர்ந்தவன் இந்த மதி. சம்பந்தம் ஆசிரியரா இருந்தப்போ உள்ளே வந்தவன், திமுகவை விமர்சனம் செய்றதுன்னா ரொம்ப ஆர்வமா இருப்பான். அப்படி அவன் போட்ட கார்ட்டூன் எதையாச்சும் முரசொலியில் தூக்கிப் போட்டு, கலைஞர் பதில் எழுதிட்டா இவனுக்கு ஒரே கொண்டாட்டமா இருக்கும். முரசொலி பத்திரிகையை தூக்கிட்டு எல்லோர்கிட்டயும் காட்டி சந்தோஷப்படுவான். அதிகபட்சம் கலைஞர் இவனை திட்டி எழுதிட்டா அதுவே இவனுடைய கார்ட்டூனுக்கு கிடைத்த அங்கீகாரம்னு நெனக்கிற கழிசடைப் பயதான் இந்த மதி. இவனை அய்யர்னு நெனச்சு திட்டுற ஆட்கள் நிறையப் பேர் இருக்காங்க. ஆனால், இவன் திருநெல்வேலி பிள்ளை என்பதுதான் நிஜம். தினமணி ஆசிரியரா வைத்தியநாதன் வந்தப்புறம், இந்த ஆள், தனிநபரை கேவலப்படுத்தி கார்ட்டூன் போடுவதை அதிகமாக்கினான். அப்போவும்கூட கலைஞரும் திமுகவும்தான் இவனுடைய அதிகபட்ச இலக்காக இருந்தது. ஏனென்றால் கலைஞரும் திமுகவும்தான் இவன் கார்ட்டூனை பாத்துட்டு குறைந்தபட்சம் திட்டவாவது செய்வாங்க. மத்த ஆட்களோ, கட்சிகளோ கார்ட்டூனையெல்லாம் ஒரு பொருட்டா நெனக்கிறதே இல்லை. ஒருகட்டத்தில் தினமணி பேப்பரே தனது கார்ட்டூனால்தான் ஓடுதுன்ற அளவுக்குப் போய்ட்டான். உடனே, இவனை தூக்கி கடாசிட்டான் வைத்தியநாதன். இவனுகளை நான் மரியாதைக் குறைச்சலா பேசுறது சிலருக்கு உறுத்தலா இருக்கலாம். நாகரிகம் தெரியாத ஆட்களுக்கு மரியாதை கொடுப்பது எனக்கு பிடிக்காது. தினமணியை விட்டு வீசப்பட்ட மதி, சும்மாவே குப்பை கொட்டினான். முகநூலில் ஏதாச்சும் கார்ட்டூன்போட்டு அரிப்பை சொறிஞ்சுக்கிட்டு இருந்தான். அப்புறம் மறுபடியும் குருமூர்த்தி சிபாரிசில் தினத்தந்தியில் கார்ட்டூனிஸ்ட்டா சேர்ந்திருக்கான். அதுகூட பெரிய அளவில் யாருக்கும் தெரியலை. அவனைப் பத்தி பேச வக்கிறதுக்கு என்ன பண்ணலாம்னு நெனச்சான். அவனுக்கு அண்ணா சிலை கை கொடுத்துச்சு. அண்ணா மீது அவனுக்கு ஒன்றும் பெரிய மதிப்பு கிடையாது. ஆனால், அண்ணாவின் மதிப்பு அவனுக்கு தெரியும். அண்ணா என்பவர் தமிழ்நாட்டின் அடையாளம் என்பதும், அவர் மீது கைவைத்தால் தனது பெயர் வெளியே வரும் என்பதும் அவனுக்கு தெரியும். அண்ணா சிலையை வரைந்து, தலைக்குப் பதிலாக கொரோனா வைரஸின் படத்தை வரைந்து தினத்தந்தியின் கார்ட்டூனாக போட்டான். அவன் நினைத்தது போலவே சமூக வலைத்தளங்களில் அவனைக் காய்ச்சி எடுத்தார்கள். அவனை மட்டுமல்ல, அவனுக்கு வேலைகொடுத்து, அவன் வரைந்த கார்ட்டூனை வெளியிட்ட தினத்தந்தியையும் நார் நாராய் கிழித்து தொங்கவிட்டார்கள். தினத்தந்தி ஓனர் அந்தப் பத்திரிகையை தொடங்கியதே திருட்டுப் பணம்தான் என்று சொல்வார்கள். ஆனால், அந்தப் பத்திரிகை சாமானிய தமிழர்களால் வளர்ந்தது. அந்தப் பத்திரிகைக்கு தந்தை பெரியார் தனது நிலத்தையே தானமாக கொடுத்தார். இன்றுவரை அந்த இடத்துக்கு சட்டபூர்வ பத்திரப்பதிவுகூட இல்லை என்பார்கள். தந்தி பத்திரிகையின் உரிமையாளர் சிவந்தி ஆதித்தன் என்பார்கள். ஆனால், சிவந்தி ஆதித்தன் தனது சகோதரர் ராமச்சந்திர ஆதித்தனுக்கு உரிய பங்கையே தர மறுத்து விழுங்கியவர். தினத்தந்தி முழுவதையும் தனது பெயரில் இருக்கிறது என்பதற்காக, தானே அபகரித்தவர் என்பார்கள். பாவம் ராமச்சந்திர ஆதித்தனுக்கு சில மாலை முரசு பதிப்புகள் மட்டுமே விட்டுத்தரப்பட்டதாக கூறுவார்கள். மாலை முரசு பத்திரிகையில் வேலை செய்யும்போது இதை கேள்விப்பட்டிருக்கிறேன். 1972 ஆம் ஆண்டு எம்ஜியார் திமுகவிலிருந்து பிரிந்த சமயத்தில், அவருடைய படத்தை படுகேவலமாக சித்திரம் தீட்டியதுதான் தினத்தந்தி. கலைஞர் அரசில் அமைச்சராக இருந்த ஆதித்தனார், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அப்படியே எம்ஜியார் பக்கம் சாய்ந்து ஜால்ரா தட்டத் தொடங்கினார். திமுக செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக கந்தசாமி தினகரன் தொடங்கியபோது, திமுக ஆட்களை தக்க வைப்பதற்காக, திமுக செய்தியையும் போடத் தொடங்கியது தினத்தந்தி. திமுகவை எதிர்த்தாலும், அதிமுகவை ஆதரித்தாலும், ஆதித்தனாரை கேவலப்படுத்திய தினமலருக்கு எதிராக திமுக கண்டனக் குரல் எழுப்பி இருக்கிறது. தினத்தந்தியை சலூன் பேப்பராக சித்தரித்த தினமலர் விளம்பரத்தையும் கண்டித்திருக்கிறது. ஆனால், சிவந்தி ஆதித்தன் இப்போது மத்திய பாஜக அரசின் பிடியில் சிக்கியிருக்கிறார். பாஜக என்ற பன்றியோடு சேர்ந்ததால், பன்றியின் உணவையே சாப்பிடத் தொடங்கியிருக்கிறார் தந்தியின் ஒனர். இவர்களுக்கு காலம்தான் பதில் சொல்லும்.

You may also like
கனிமொழியின் மீடியா வெளிச்சத்தால் மிரளுகிறாரா உதயநிதி?
ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் வரலாறு பகுதி – 2
நாகேஷ் மீது கமலுக்கு அப்படி என்ன கோபம்?
நாவலருக்கு திமுக நூற்றாண்டு விழா நடத்துவது சரியா?

Leave a Reply