Home > அரசியல் > திமுக கையில் தேனி மாவட்டம்!

திமுக கையில் தேனி மாவட்டம்!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, கம்பம் ஆகிய நான்கு தொகுதிகளையும் இந்தமுறை திமுக கூட்டணியே கைப்பற்றும் என்று உறுதியாக சொல்கிறார்கள்.

இந்த நான்கு தொகுதிகளில் பெரியகுளம் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சிக்கும், கம்பம் தொகுதி காங்கிரஸுக்கும் ஒதுக்கப்படலாம் என்றும், போடி மற்றும் ஆண்டிபட்டி தொகுதிகளில் திமுக தனது வேட்பாளர்களை நிறுத்தும் என்றும் தெரிகிறது.

பெரியகுளம் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் யாராக இருந்தாலும் வெற்றி என்று திமுகவினர் உறுதியாக சொல்கிறார்கள். அதேசமயம் கம்பம் தொகுதியை முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஹாரூன் தனது மகனுக்காக கேட்கிறார் என்கிறார்கள்.

தினகரனின் பணபலம், படைபலத்தையே திணறடித்து வெற்றிபெற்றவர் ஹாரூன். எனவே, தனது மகனை ஜெயிக்க வைப்பதில் அவருக்கு எந்தச் சிரமமும் இருக்காது என்கிறார்கள். அதிமுகவின் பணபலத்தை இவர் முறியடிப்பார்.

திமுகவைப் பொருத்தமட்டில் ஆண்டிபட்டித் தொகுதியில் செல்வாக்கு மிக்க பிறமலைக்கள்ளர் குடும்பத்தைச் சேர்ந்த ஜெயக்குமாருக்கு போட்டியிட வாய்ப்புக் கிடைக்கும் என்று தெரிகிறது. தற்போதைய எம்.எல்.ஏ. மகராஜனுக்கு வயதாகிவிட்டதால் போட்டியிலிருந்து விலகுவார் என்று கூறப்படுகிறது. ஜெயக்குமார் ஜாதிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு முகம் இருக்கிறது. மேகமலை வாக்குகள் மொத்தமாக கிடைக்கும் வாய்ப்பும் இவருக்கு இருப்பதாக கூறப்படுகிறது. மாவட்டப் பொறுப்புக்குழுத் தலைவராக இருந்தவர். தலைமைக்கு கட்டுப்பட்டவர். நிச்சயம் இவருக்கு சீட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

அதுபோலவே, போடி தொகுதியில் இந்தமுறை ஓ.பி.எஸ்சை தோற்கடிக்கக்கூடிய பணியை தங்கத் தமிழ்ச்செல்வனிடம் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். ஸ்டாலினின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான அடிப்படை வேலைகளை தமிழ்ச்செல்வன் பெரும்பகுதி நிறைவேற்றியிருக்கிறார் என்று கூறுகிறார்கள். கடந்தமுறை எம்.பி. தேர்தலில் பணத்தை வாரியிறைத்து வாக்குப்பெட்டிகளில் முறைகேடு செய்து பெற்ற வெற்றியைப்போல இந்த முறை பன்னீர் செல்வத்தால் வெற்றிபெற முடியாது என்பதை உறுதியாக சொல்கிறார்கள்.

இது திமுக கூட்டணி இறுதியாகாத, வேட்பாளர் அறிவிப்பு உறுதியாகாத நிலையில் நமக்கு கிடைத்த தகவல். கூட்டணி முடிவாகி, வேட்பாளர் பட்டியல் வெளியானபிறகு நிலவரத்தை பார்க்கலாம்.

Leave a Reply