Home > அரசியல் > வி.சி.க.வுக்கு இழுக்கானவர்கள் இவர்கள்!

வி.சி.க.வுக்கு இழுக்கானவர்கள் இவர்கள்!

சுகந்தி நாச்சி.. இரவிக்குமார் போன்ற பெரியார் வெறுப்பு நீலச்சங்கிகள் விசிக வுக்கு இழுக்கே..

பெரியார் ஓபிசி சார்பு நிலை உள்ளவர் எனவும்.. கன்னட தெலுகு அரசியல் எனவும் தும்பிகளின் பல பொய் அவதூறு நெருப்புகளுக்கு இவர்கள் நீலநெய் ஊற்றபார்க்கிறார்கள்…

ஆரியத்தை உள்வாங்கும் யாரும் அடிமைகளே… சூத்திர, பஞ்சமர்களுக்கு நீல ,தமிழ் தேசிய சங்கிகள் தரும் வியாக்கியானம் கடும் நகைப்புக்குரியது.

அறிவு வறட்சியின் விளைவது…

சாட்டை துரை எனும் நபரை ஒருவீடியோவுக்காக தமிழ் தேசிய பிராமணன் (அவனே சொல்வது) களப்பலி ஆக்க துணிந்த கதை தெரிந்தது தானே…

ஆசிரியரை ஓசிச்சோறு என்பதில் அத்தனை புளகாங்கிதம் சிலருக்கு…

வீரமணி விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரல்ல…

ஆனால் அன்றாடம் விடுதலையை படித்து விட்டு இயக்க செயல்பாடுகளை அறிய முற்படாமல் வாய்க்கு வந்த ஏச்சு அறிவுடையதல்ல…

பெரியார் திக போலவோ இன்னபிற திராவிட இயக்கங்கள் போலவோ வேகமான செயல்பாடு இல்லை என்ற கோபம் எனக்கும் உண்டு…

ஆனால் விதை நெல்லை விரயமாக்க கூடாது என்பதே முதிர்ந்த அணுகுமுறை..

வடமாநிலங்களில் இன்றைக்கு பெரியார் வாசிக்க படுகிறார் அவரது படங்கள் பதாகைகளில் உள்ளன என நாம் கொள்ளும் பெருமைகளுக்கு பின்னால் உள்ள ஆசிரியரின் உழைப்பு சாதரணமானதல்ல..

ஆர்எஸ்எஸ், காங்கிரஸ் காலத்திலலேயே, திடலுக்கு ஏற்படுத்திய நெருக்கடிகளை சட்ட பூர்வமாக வெற்றி கண்டவர் ஆசிரியர்…

தில்லி பெரியார் மையம் சொல்லும் அவருழைப்பை…

31சி சட்டம் சொல்லும் அவர் அறிவாற்றலை…

இவை நிகழும் போது மேற்படி நீலச்சங்கிகளும் பாலாக்களும் தினமலர் கிசுகிசு படித்து மகிழும் வயசுகளில் இருந்திருப்பார்கள்…

மலிவு விலையில் புத்தகங்கள் இன்றைக்கும் திடலில் கிடைக்கிறது. ஆனால் இந்த வாட்சப் மடங்களுக்கு புத்தக வாசனை ஆகாதே…

எனை விமர்சனம் செய்பவனும் வருவான் என‌ தன் மீதான விமர்சனங்களை வரவேற்பவர் பெரியார். ஆனால் விமர்சனம் என்னும் பெயரில் விஷமவிஷம் வீசுவதை பொறுக்க முடியாது.

அம்பேத்கரும் பெரியாரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை சாதி, சனாதன எதிர்ப்பாளர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

நாக்பூர், சங்கிகளின் தலைமை பீடமென்றால்….

திடல் தான் முற்போக்காளர்களின் படை வீடு.

திடலும் ஆசிரியரும் மட்டுமே இன்றைக்கும் நீடித்திருக்கும் விதை நெல் என்பதை முற்போக்காளர்கள் உணர வேண்டும்.

வீரமணி ஓசிச்சோறு தான்…
திடல் தின்னி தான்…

பெரியார் தந்த கருத்துச்சோற்றை நாடோறும் பரப்பி மக்கள் தின்ன மகிழும் ஓசிச்சோறு தான்…

வாழ்க வசவாளர்கள்…

வாழ்வார் பெரியார்.

பா. அசோக்

You may also like
அவமானங்களில் இருந்து தமிழகத்தை மீட்டெடுத்த மு.க.ஸ்டாலின்…
சோறு போட்டு உதை வாங்கிய நீலச் சங்கிகள்!
2.நீதிக்கட்சி அரசின் சாதனைகளும் பூசல்களும்! – திராவிட இயக்க வரலாறு!
1. நீதிக்கட்சியின் தோற்றமும் பார்ப்பனர் பதற்றமும்! – திராவிட இயக்க வரலாறு

Leave a Reply