Home > அரசியல் > திமுகவில் ஒற்றுமை முக்கியம் – துரைமுருகன் அறிவுரை

திமுகவில் ஒற்றுமை முக்கியம் – துரைமுருகன் அறிவுரை

திமுகவினர் தேர்தலில் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசிக்க திமுக தலைவர் ஸ்டாலின், அக்கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழகச் செயலாளர்கள் கூட்டம் டிசம்பர் 20 அன்றுசென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது.

இதில் பேசிய திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், எம்.ஜி.ஆர் யாரைக் காட்டினாலும் அவர் எம்.பி, எம்.எல்.ஏ என்ற நிலை இருந்தது.

தமிழக அரசியலில் மகத்தான வல்லமை பெற்றிருந்த எம்.ஜி.ஆரையே, மக்களவைத் தேர்தலில் ஜீரோ வாங்க வைத்த பெருமை திமுகவைச் சேரும் என்று தெரிவித்தார்.

பணம் கூட நமக்கு இரண்டாவது தான். முதலில் நமக்குள் ஒற்றுமை தேவைப்படுகிறது என்ற நிர்வாகிகளுக்கு அறிவுறுத்திய துரைமுருகன், ஒருவருக்கொருவர் காட்டும் மனக் கசப்பு ஸ்டாலின் உள்பட முன்னணி தலைவர்களாகிய எங்கள் அனைவருக்கும் வேதனையைத் தருகிறது.

சேலத்தை பிரிக்க வேண்டுமென 100 கடிதம் வந்தால், பிரிக்காதே என 150 கடிதம் வருகிறது என்று சுட்டிக்காட்டினார்.

மேலும், திமுகவில் உள்ள சிலர் வருமான வரித்துறைக்கு செய்தி சொல்லும் அளவுக்கு வன்நெஞ்சம் படைத்தவர்களாக இருக்கிறார்கள். மனக்கசப்பு காட்டாமல் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

தேர்தல் முடியும் வரை யாரிடமும் பகைமை காட்ட மாட்டேன் எனவும், யாரையும் போட்டுக்கொடுக்க மாட்டேன் என்றும் நிர்வாகிகள் உறுதியேற்க வேண்டும்.

நம் அனைவரின் ஒரே லட்சியம் ஸ்டாலினை கோட்டையில் அமரவைக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்க வேண்டும்என பேசி முடித்தார் துரைமுருகன்.

Leave a Reply