பிரதமர் மோடி எல்லாமே காஸ்ட்லியாகத்தான் பயன்படுத்துகிறார். 10 லட்சம் ரூபாய் உடை, லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள காளான் உணவு என்று அவர் ராஜபோக வாழ்க்கையில் திளைக்கிறார். அவர் வாங்கும் சம்பளத்தைப் போல 10 மடங்கு அதிகமாக அவருடைய மேக்கப் மேனுக்கு சம்பளம் கொடுக்கிறார்.
இதெல்லாம் தெரிந்த நமக்கு அவர் பயன்படுத்தும் மொபைல் போன் மற்றும் சிம்கார்டு எதுவெனறு தெரியுமா?
அவர் பயன்படுத்தும் மொபைல் ஐபோன் 6 என்றும், அவர் பயன்படுத்தும் சிம்கார்டு வோடபோன் என்றும் சொல்லப்பட்டது…
உடனே, மேக் இன் இந்தியா பேசும் மோடி எப்படி ஐபோனை பயன்படுத்தலாம், பிஎஸ்என்எல் சிம்மை பயன்படுத்தாமல் எப்படி வோடபோனை பயன்படுத்தலாம். குறைந்த பட்சம் அவருடைய முதலாளி அம்பானிக்கு சொந்தமான ஜியோ சிம்மையாவது பயன்படுத்தியிருக்கலாமே என்று பேசத் தொடங்கிவிட்டார்கள். இது கொரோனாவுக்கு முன். கொரோனாவுக்கு பின் என்ன நிலைமை என்பது தெரியவில்லை.