Home > அரசியல் > சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் 150 பேர் மீது வழக்கு

சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் 150 பேர் மீது வழக்கு

திருமாவளவனை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பாரதீய ஜனதா கட்சியினர் 150 பேர் மீது ஈரோடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனை கண்டித்தும் அவரை கைது செய்ய வலியுறுத்தியும் ஈரோடு தெற்கு, வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது . இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.

திருமாவளவனை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் - TopTamilNews

பின்னர் திடீரென அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கொரோனா ஊரடங்கு தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 40 பெண்கள் 110 ஆண்கள் என 150 பேர் மீது வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

You may also like
ஆரியத்தை வேரறுக்க வந்த திராவிட வாரிசுகள் நாங்கள் – அமித்ஷாவை தெறிக்க விட்ட ஸ்டாலின்!
அம்மன் ஆலயம் கட்ட உதவும் ஒசூர் திமுக எம்எல்ஏ சத்யா!
பாஜக கூட்டணி முன்னிலை
பாஜகவினால் தென்னிந்தியாவை நெருங்க முடியாது; அதற்கு தினேஷ் குண்டுராவ்
பாஜகவினால் தென்னிந்தியாவை நெருங்க முடியாது – தினேஷ் குண்டுராவ்

Leave a Reply