Home > அரசியல் > விஜய் மக்கள் இயக்க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஏன்?

விஜய் மக்கள் இயக்க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஏன்?

நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் மாற்றி அமைத்ததை அடுத்து அவர் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில் அவரது அப்பா சந்திரசேகர் திடீரென அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்தார்.

உடனடியாக தனக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தன் தந்தை தொடங்கிய அரசியல் கட்சியில் மக்கள் இயக்கத்தினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அறிக்கை வெளியிட்டார்.

அடுத்த சில நாட்களில் சந்திரசேகரே அந்த கட்சியை கலைப்பதாக அறிவித்தார்.அதற்குப்பின் விஜய், அவரது தந்தை இருவருமே இது தொடர்பாக மௌனம் காத்து வந்த நிலையில்… கடந்த சில நாட்களாக கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் இருக்கும் விஜய்யின் வீட்டிற்குவிஜய் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர்களை அழைத்தனர்.

அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் ஒருசேர வைத்து கூட்டம் கூட்டினால்… அது மீண்டும் ஒரு பரபரப்பிற்கு வித்திடும் என்று கருதிய விஜய்மக்கள் இயக்கத்தின் மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த்தை அழைத்து தன் வீட்டிலேயே ஒவ்வொரு நாளும் சில மாவட்டச் செயலாளர்களை கூப்பிட்டு பேசுமாறு கூறியிருக்கிறார்.

இதையடுத்து விஜய் மக்கள் இயக்க மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் டிசம்பர் 19ஆம் தேதி நாமக்கல், திருச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

தொடர்ச்சியாக  மாவட்ட நிர்வாகிகளை அழைத்து பேசி வருகின்றனர்அப்போது ரஜினி, கமல் ஆகியோரின் கட்சிகள் மாவட்ட அளவில் எவ்வாறு இயங்குகின்றன எனவும்…

வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் பங்கு என்னவாக இருக்க வேண்டும் எனவும் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியுள்ளார் புஸ்ஸி ஆனந்த்.இந்த கூட்டங்களில் தான் இருந்தால் தன் முன்னிலையில் மாவட்ட நிர்வாகிகள் வெளிப்படையாக உண்மையான நிலையைச் சொல்ல மாட்டார்கள் என்று கருதிய விஜய், இந்த ஆலோசனைக் கூட்டங்களில் தான் பங்கேற்காமல் புஸ்ஸி ஆனந்த் மட்டுமே பங்கேற்குமாறு கூறியுள்ளார்.

ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை முடிந்த பிறகு தகவல்கள் அப்படியே விஜய்க்கு கூறப்படுகின்றன. 

வரும் சட்டமன்றத்தேர்தலில் ரஜினிக்கு ஆதரவாக விஜய் மக்கள் இயக்கம் செயல்பட வேண்டும் என பாஜக தரப்பு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்பட்டு வந்தது இந்த நிலையில் தான் விஜய் தான் நேரடியாக பங்கேற்காமல் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளின் கருத்துக்கள் என்ன என்பதை அறிவதற்காக ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளையும் அழைத்து தன் வீட்டிலேயே ஆலோசனைக் கூட்டத்தை நடத்த வைத்திருக்கிறார்.

Leave a Reply