Home > அரசியல் > ரஜினிகாந்த் வருகையால் தமிழக அரசியலில் ஒன்றும் நடக்கப்போவதில்லை..!!!

ரஜினிகாந்த் வருகையால் தமிழக அரசியலில் ஒன்றும் நடக்கப்போவதில்லை..!!!

தமிழக அரசியலில் ரஜினிகாந்த் வருகையால் ஒரு புதுமையும் நடக்க போவதில்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் அரசியல் பிரவேசம் பற்றிய தனது அறிவிப்பினை டுவிட்டர் வழியே கடந்த 3ந்தேதி உறுதிப்படுத்தினார்.

அவர் வெளியிட்ட செய்தியில், ஜனவரியில் கட்சி துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கி, வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் முடிவை உறுதி செய்துள்ளார்.

இதனால், அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதுவரை வேறு கட்சிகளில் இருந்த அவரது தீவிர ரசிகர்கள் கூட ரஜினிகாந்தின் புதிய கட்சியில் சேரக்கூடும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறும்பொழுது, தமிழக அரசியலில் ரஜினிகாந்த் வருகையால் ஒரு புதுமையும் நடக்க போவதில்லை என கூறியுள்ளார். ரஜினிகாந்த் கட்சிக்கு அ.தி.மு.க.வினர் செல்லமாட்டார்கள் என்றும் உறுதிப்பட கூறியுள்ளார்.

You may also like
அரசியலுக்கு வருவேனா, இல்லையா என்பது பற்றி ஆலோசிக்க உள்ளேன் – நடிகர் ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் 15 நாட்கள் சென்னையில் தனிமைப்படுத்தி கொள்ள திட்டம்
வடக்கு மண்டலத்தில் அழகிரி – மு.க.ஸ்டாலின் கவனிப்பாரா?
ரஜினிகாந்த் பிறந்த நாள்- நள்ளிரவில் ரசிகர்கள் கொண்டாட்டம்

Leave a Reply