Home > அறுசுவை > ‘காளான் முட்டை மசாலா’ சாப்பிடுங்க

‘காளான் முட்டை மசாலா’ சாப்பிடுங்க

‘காளான் முட்டை மசாலா’ சாப்பிடுங்க

மதியச் சாதத்துடன் ‘காளான் முட்டை மசாலா’ சாப்பிடுங்க

காளானில் புரதம், தாயமின், நியாசின், வைட்டமின் சி, வைட்டமின் டி ,பொட்டாசியம் மாங்கனிசு, கால்சியம், பாஸ்பரஸ் எனப் பல சத்துக்கள் உள்ளன.காளான் ரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம்.காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும். மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.

ஒரு ருசியான, சத்தான “காளான் முட்டை மசாலா”சமையல் குறிப்பைப் பார்க்கலாம்.

தேவை

1 கப் காளான், முட்டை-1, பல்லாரி 1,பட்டை1, மஞ்சள் தூள் ஒரு தேக்கரண்டி, தனியா தூள் 1 தேக்கரண்டி, தக்காளி-1, கிராம்பு-2, சோம்பு அரை ஸ்பூன், பூண்டு 2 பல், கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை

காளானை நன்றாக கழுவி சிறு,சிறு துண்டுகளாக வெட்டவும். பல்லாரி, கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கவும். பூண்டை சிறியதாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் சூடானதும் பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு தாளித்து, பின்னர் பூண்டு, வெங்காயம் போட்டு வதக்கவும். வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.. தக்காளி வதங்கியதும் மிளகாய்த்தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். மசாலா பச்சை வாசனை போனதும் காளான் சேர்த்து லேசாக வதக்கவும். காளான் நன்கு வெந்த பின்பு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறி விட்டு 5 நிமிடம் கழித்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

You may also like
காலா சானா சாலட்
தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவும் உணவுகள்
தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவும் உணவுகள்
dosa
மைதா தோசை
Poondu Milagu Sadam
பூண்டு மிளகு சாதம் செய்முறை

Leave a Reply