Home > அறுசுவை > கத்தரிக்காய் பச்சடி

கத்தரிக்காய் பச்சடி

தேவையான பொருட்கள்

கத்தரிக்காய் – 3,
உருளைக்கிழங்கு – 1,
சின்ன வெங்காயம் – 10,
தக்காளி – 1,
பச்சை மிளகாய் – 6,
சிவப்பு மிளகாய் – 2, பாசிப்பருப்பு – 1 கப்,
மஞ்சள் பொடி – 1/2 டீஸ்பூன்,
புளி – நெல்லிக்காய் அளவு,
கொத்தமல்லி,
கறிவேப்பிலை – சிறிது,
கடுகு,
உளுத்தம்பருப்பு – தலா 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை

கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளியை ஒரே அளவுள்ள துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கிக்கொள்ளவும். குக்கரில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் பாசிப்பருப்பு, மஞ்சள் பொடி, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும். புளியை ஊற வைத்து கரைத்துக்கொள்ளவும். காய் வெந்தவுடன் குக்கரைத் திறந்து புளியை ஊற்றி உப்பு போட்டு வேக விடவும். ஒரு தாளிப்புக்கரண்டியில் 2 டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து ஊற்றவும். நன்றாக கொதித்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கவும்

You may also like
காய்கறி எலுமிச்சை சாதம்
பிரண்டை துவையல்
கொத்தமல்லி பிரியாணி
கொள்ளு சாதம்

Leave a Reply