Home > அறுசுவை > மாங்காய் சாதம்

மாங்காய் சாதம்

தேவையான பொருட்கள்

உதிராக வடித்த சாதம் – 2 கப்,
புளிப்பான மாங்காய் துருவல் – 1 கப்,
பச்சை மிளகாய் – 6,
பெருங்காயம் – 1 டீஸ்பூன்,
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்,
கடுகு, உளுந்து – தலா அரை டீஸ்பூன்,
மிளகாய் வற்றல் – 3,
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.

செய்முறை

ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயில் மாங்காய்த் துருவல் மற்றும் மிளகாயை வதக்கி எடுத்து கரகரப்பாக அரையுங்கள். மீதமுள்ள எண்ணெயில், கடுகு, உளுந்து, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றைத் தாளித்து, மஞ்சள் தூள் சேர்த்து இறக்குங்கள். இதனை மாங்காய் கலவையோடு சேர்த்து மேலும் ஒரு சுற்று அரைத்தெடுங்கள். சாதத்தில் அரைத்த விழுது, தேவையான உப்பு சேர்த்துக் கலக்குங்கள்.

You may also like
காய்கறி எலுமிச்சை சாதம்
பிரண்டை துவையல்
கொத்தமல்லி பிரியாணி
கொள்ளு சாதம்

Leave a Reply