Home > அறுசுவை > குடைமிளகாய் சட்னி

குடைமிளகாய் சட்னி

தேவையான பொருட்கள்:

குடைமிளகாய் 2,
வெங்காயம் 1,
தக்காளி 3,
புளி 25 கிராம்,
மிளகாய் வற்றல் 1,
சீரகம் 1 தேக்கரண்டி,
கொத்துமல்லி இலை 1 கப்,
சமையல் எண்ணெய் 1 தேக்கரண்டி,
உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை:

தக்காளி, வெங்காயம், குடைமிளகாய் முதலியவற்றை நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணை விட்டு, சீரகம், மிளகாய் வற்றல், வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும். பின் ஆறவைத்து, புளி, கொத்துமல்லி இலை சேர்த்து அரைக்கவும். சட்னியில் சிறிது நல்லெண்ணை சேர்க்கவும்.

You may also like
அவல் முந்திரி பொங்கல்
கொள்ளு பணியாரம்
காய்கறி எலுமிச்சை சாதம்
பிரண்டை துவையல்

Leave a Reply