Home > அறுசுவை > கொள்ளு சாதம்

கொள்ளு சாதம்

என்னென்ன தேவை?

உதிராக வடித்த சாதம் – 1 கப்,
கொள்ளு – 1/2 கப்,
நீளவாக்கில் நறுக்கிய பச்சைமிளகாய் – 2,
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1,
கரம்மசாலாத்தூள் – 1 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்,
உப்பு,
அலங்கரிக்க கொத்த மல்லித்தழை – தேவைக்கு.

தாளிக்க…

பட்டை – சிறிய துண்டு,
லவங்கம் – 2,
பொடியாக நறுக்கிய பூண்டு – 4 பல்,
நெய் – 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கொள்ளை 8 மணி நேரம் ஊறவைத்து, வேகவைத்து தண்ணீரை வடித்து கொள்ளவும். கடாயில் நெய் விட்டு பட்டை, லவங்கம் தாளித்து, பூண்டு போட்டு நன்கு வதக்கி, பச்சைமிளகாய், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு வடித்த கொள்ளு, மஞ்சள் தூள், கரம்மசாலாத்தூள், உப்பு, சாதம் சேர்த்து கிளறி அடுப்பை நிறுத்தவும். கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறவும்.

You may also like
பொட்டுக்கடலை உருண்டை
காலிஃப்ளவர் ஃப்ரை
பாசிப்பருப்பு பணியாரம்
வாழைத்தண்டு துவையல்

Leave a Reply