Home > அறுசுவை > கொத்தமல்லி பிரியாணி

கொத்தமல்லி பிரியாணி

தேவையான பொருட்கள்

எண்ணெய், நெய் – 1/2 கப்,
(கொத்தமல்லி – 1 கப்,
புதினா – 1/2 கப்,
பச்சை மிளகாய் – 3,
சின்ன வெங்காயம் – 10 அரைத்து வைத்துக்கொள்ளவும்),
பிரியாணி அரிசி – 1/2 கிலோ,
பெரிய வெங்காயம் – 2,
முந்திரி – 10,
பச்சை பட்டாணி – 1/2 கப்,
இஞ்சி,
பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்,
தயிர் – 1/2 கப்,
உப்பு – தேவைக்கு,
எலுமிச்சம்பழம் – 1,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
மல்லித்தூள் – 1 டீஸ்பூன்,
பிரியாணி மசாலா – 1 டீஸ்பூன்,
பட்டை – 1,
கிராம்பு – 2,
சோம்பு – 1/2 டீஸ்பூன்,
பிரியாணி இலை – 2,
ஏலக்காய் – 2,
மராட்டி முக்கு – 1,
நட்சத்திர சோம்பு – 1,
உப்பு – தேவைக்கு.

செய்முறை

குக்கரில் நெய், எண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு, சோம்பு, பிரியாணி இலை, ஏலக்காய், மராட்டி முக்கு, நட்சத்திர சோம்பு சேர்த்து பின் முந்திரி, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கியவுடன், இஞ்சி, பூண்டு பேஸ்ட், தயிர், மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். பின் தேவையான அளவு தண்ணீர், உப்பு, பிரியாணி மசாலா, எலுமிச்சம்பழம் சேர்த்து கொதி வந்தவுடன் அரிசி, கொத்தமல்லி சேர்த்து 20 நிமிடம் மிதமான சூட்டில் வைத்தால் கமகமக்கும் கொத்தமல்லி பிரியாணி தயார். இதனுடன் தயிர் பச்சடி சேர்த்து பரிமாறவும்.

You may also like
அவல் வடை
பொட்டுக்கடலை உருண்டை
காலிஃப்ளவர் ஃப்ரை
பாசிப்பருப்பு பணியாரம்

Leave a Reply