Home > அறுசுவை > அவல் முந்திரி பொங்கல்

அவல் முந்திரி பொங்கல்

தேவையான பொருட்கள்

அவல் – 1/4 கிலோ,
முந்திரிப்பருப்பு,
உளுந்தம் பருப்பு – 5 மேஜைக் கரண்டி,
மிளகு – 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2,
சீரகம் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
பெருங்காயம்,
கறிவேப்பிலை – தேவைக்கேற்ப,
நெய் – 150 கிராம்.

செய்முறை

அவலை சுத்தம் செய்து 2 கப் தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைக்கவும். உளுந்தம்பருப்பை வெதுவெதுப்பான சுடுநீரில் 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். முந்திரியை பொடிக்கவும். ஊறிய அவலில் உப்பு, பச்சை மிளகாயை சேர்க்கவும். சீரகம், மிளகை பொடித்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து, உளுந்தம் பருப்பை வேக விடவும். வெந்ததும் அத்துடன் அவலைச் சேர்த்து சிறு தீயில் வைத்து கிளறவும். ஒரு வாணலியில் நெய் விட்டு பொடித்த முந்திரி, பெருங்காயம், சீரகத்தூள், தட்டிய மிளகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அவல்,  உளுந்தப்பருப்பு கலவையைக் கொட்டி, நெய் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்

You may also like
அவல் வடை
பொட்டுக்கடலை உருண்டை
காலிஃப்ளவர் ஃப்ரை
பாசிப்பருப்பு பணியாரம்

Leave a Reply