Home > அறுசுவை > உருளைக்கிழங்கு பிரியாணி

உருளைக்கிழங்கு பிரியாணி

தேவையான பொருட்கள்

எண்ணெய், நெய் – 1/4 கப்,
பாஸ்மதி அரிசி – 1 கப்,
உருளைக்கிழங்கு – 2,
வெங்காயம் 2,
தக்காளி – 2,
பச்சை மிளகாய் – 2,
கொத்தமல்லி, புதினா – 1/4 கப்,
கறிவேப்பிலை – தேவைக்கேற்ப,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
பட்டை – 2, கிராம்பு – 3,
ஏலக்காய் – 3,
அன்னாசி பூ – 1,
பிரியாணி இலை – 1,
கரம் மசாலா – 1 டீஸ்பூன்,
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.

செய்முறை

குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், அன்னாசி பூ,, பிரியாணி இலை சேர்த்து அதன்பின் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பின் உருளைக்கிழங்கு, இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். பின் தேவையான அளவு தண்ணீர், கரம் மசாலா, கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை போட்டு கொதி வந்தவுடன் அரிசியை சேர்த்து மிதமான சூட்டில் 15 நிமிடம் வைத்து இறக்கவும். இப்பொழுது கமகமக்கும் சுவையான உருளைக்கிழங்கு பிரியாணி தயார். இதனுடன் தயிர் பச்சடி, குருமா மற்றும் உருளைக்கிழங்கு சில்லி சேர்த்து பரிமாறவும்.

குறிப்பு: பிரியாணி செய்யும்பொழுது வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கினால் சுவை அதிகரிக்கும்.

You may also like
காஞ்சிபுரம் இட்லி
பப்பாளிக்காய் சாதம்
தேங்காய்ப்பால் பீஸ் புலாவ்
எள் சாதம்

Leave a Reply