Home > அறுசுவை > பன்னீர் பிரியாணி

பன்னீர் பிரியாணி

தேவையான பொருட்கள் குங்கும பால் செய்ய

சூடான பால் – 1 மேசைக்கரண்டி குங்கும பூ

பன்னீர் ஊறவைக்க

கெட்டி தயிர் – 1 கப்
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
தனியா தூள் – 1 தேக்கரண்டி
ஆம்சுர் தூள் – 1 தேக்கரண்டி
கசூரி மேத்தி
பன்னீர் – 400 கிராம்
உப்பு

சாதம் சமைக்க

பாஸ்மதி அரிசி – 1 கப் ( 250 கிராம் )
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
பிரியாணி இலை – 1
பட்டை – 1 துண்டு
அன்னாசி பூ – 1
ஜாவித்ரி – 1
உப்பு

பிரியாணி செய்ய

நெய் – 2 மேசைக்கரண்டி
பிரியாணி இலை – 1
பட்டை – 1 துண்டு
ஏலக்காய் – 4
கிராம்பு – 5
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
தக்காளி – 2
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
தனியா தூள் – 1/2 தேக்கரண்டி
புதினா இலை
கொத்தமல்லி இலை
உப்பு

செய்முறை

  1. பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
  2. ஒரு சிறிய கிண்ணத்தில் வெதுவெதுப்பான பால் எடுத்து குங்குமப்பூ போட்டு வைக்கவும்.
  3. ஒரு பாத்திரத்தில் கெட்டித் தயிர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மாங்காய் தூள், உப்பு, கசூரி மேத்தி சேர்த்து நன்கு கலந்து இதனுடன் நறுக்கிய பன்னீர் துண்டுகளை போட்டு கலந்து 30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
  4. ஒரு அகல பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரை கொதிக்கவிட்டு ஊற வைத்த பாஸ்மதி அரிசியை போடவும்.
  5. இதனுடன் கிராம்பு, பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை, அன்னாசி பூ மற்றும் உப்பு சேர்த்து முழுமையாக சாதத்தை வேகவைக்கவும்.
  6. சாதம் நன்கு வெந்தவுடன் வடித்து எடுத்து வைக்கவும்.
  7. ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
    வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  8. இதன் பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  9. தக்காளி வதங்கிய பின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, தனியாத்தூள், கொத்தமல்லி இலை, புதினா இலை சேர்த்து வதக்கவும்.
  10. வதங்கிய பின் ஊற வைத்த பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறவும்.
  11. பன்னீர் மசாலா வதங்கியபின் இதில் மேல் வேக வைத்த சாதத்தை பரப்பி போடவும்.
  12. இதன்மேல் குங்குமப் பால், சிறிதளவு கொத்தமல்லி மற்றும் புதினா இலை போட்டு பாயில் பேப்பரை கொண்டு மூடவும்.
  13. குறைந்த தீயில் 10 நிமிடங்களுக்கு தம் செய்யவும்.
  14. சுவையான பன்னீர் பிரியாணி தயார்.

Leave a Reply