Home > அறுசுவை > ரவை மசாலா தோசை செய்முறை

ரவை மசாலா தோசை செய்முறை

தேவையான பொருட்கள்:

ரவை – 1 கப்
தயிர் – 1/2 கப்
உப்பு – தேவைக்கேற்ப
துருவிய கேரட் – 1/2 கப்
வெங்காயம் – 1/4 கப்
வேகவைத்த உருளை – 1 கப்
மிளகாய்தூள் – 1 தேக்கரண்டி
மிளகுதூள் – 1/2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
தண்ணீர் – 1/2 கப்
எண்ணெய் – தேவைக்கேற்ப
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி, தேவையான அளவு

செய்முறை:

பாத்திரத்தில் ரவை, தயிர், தண்ணீர், உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு அதில் கொத்தமல்லி, மிளகு தூள், தேவையான அளவு தண்ணீர், மஞ்சள் தூள் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு தயார் செய்யவும்.

கடாயில் எண்ணெய் சேர்த்து வெங்காயம், கேரட், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

பிறகு அதில் தேவைக்கேற்ப உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் சேர்த்து கிளறவும் பின் வேகவைத்த உருளை சேர்த்து மசாலா தயார் செய்யும்.

தோசைக்கல்லில் மாவு சேர்த்து தோசை தயார் செய்யவும் பிறகு தயார் பண்ண மசாலாவும் நடுவில் வைத்து எண்ணெயில் பொறித்து எடுக்கவும் (அல்லது) தோசைக்கல்லில் இருபுறமும் சிவந்து வரும் வரை சுட்டு எடுக்கவும் சுவையான ரவை மசாலா தோசை ரெடி.

Leave a Reply