Home > அறுசுவை > கொள்ளு துவையல் செய்முறை

கொள்ளு துவையல் செய்முறை

நற்குணம் நிறைந்த கொள்ளு துவையல் தயார்.

இது சூடான சாதம், தோசை அனைத்திற்கும் ஏற்ற கொள்ளு துவையல் செய்முறை

தேவையான பொருட்கள்:

கொள்ளு 1/4 கப்
துவரம் பருப்பு 1 தேக்கரண்டி
வர மிளகாய் 2
மிளகு- 1/2 தேக்கரண்டி
சீரகம்- 1/2 தேக்கரண்டி
தேங்காய் -2 மேஜைக்கரண்டி
பூண்டு- 2 பல்
உப்பு -1/2 தேக்கரண்டி, புளி

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு கொள்ளு வறுத்துக்கொள்ளவும். நிறம்மாறும் வரை வறுத்து, எடுத்துக்கொள்ளவும்.

அதே வாணலியில் எண்ணெய் காயவைத்து கடுகு, துவரம்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வரும் போது, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, தேங்காய், புளி மற்றும் உப்பு சேர்த்து இறக்கவும்.

இந்த கலவையை வறுத்து வைத்துள்ள கொள்ளு பருப்புடன் சேர்த்து அரைத்து எடுக்கவும், சுவையான மனமும், நற்குணமும் நிறைந்த கொள்ளு துவையல் தயார்.

இது சூடான சாதம், தோசை அனைத்திற்கும் ஏற்றது.

குறிப்பு:

* கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முதலிடம். உடலிலுள்ள தேவையற்ற தண்ணீரை கொள்ளு எடுத்து விடும்.

* வளரும் குழந்தைகளுக்கும், உடற்பயிற்சி செய்வோருக்கும் மிகவும் உகந்தது.

You may also like
கம்மங்கூழ் குடிப்பதால் நமது உடலுக்கு எண்ணற்ற நண்மைகள் கிடைக்கின்றன.
தேங்காய் சாதம்
தேங்காய் சாதம் செய்முறை

Leave a Reply