Home > அறுசுவை > உணவுகள் ஜீரணமாகும் நேரம் தெரியவேண்டுமா

உணவுகள் ஜீரணமாகும் நேரம் தெரியவேண்டுமா

சில உணவுகள் ஜீரணமாக ஆகும் காலம்

நொறுங்கத் தின்றால் நூறு வயது’ எனும் பழமொழிக்கேற்ப, நாம் வாயால் நன்கு, கடித்து, மென்று, அரைத்து உண்டால், பாதி செரிமானத்தை வாயிலேயே முடித்துவிடலாம்.

நாம் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆக எவ்வளவு நேரம் ஆகும், செரிமானம் எப்படி நடைபெறுகிறது. ஒவ்வொரு உணவும் செரிமானமாக எவ்வளவு நேரம் எடுக்கும்.

உணவு, வாயில் இருந்து உணவுக்குழாய் வழியாக இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் எனப் பயணம் செய்து, செரிமானமாகிறது.

நம் வாயில் சுரக்கும் எச்சில்தான் செரிமானத்தின் தொடக்கம்.

இது, பெரிய மூலக்கூறுகளாக இருக்கும் உணவுப் பொருட்களை ஈரப்பதமாக மாற்றி, உடைத்து எளிதாக உணவுக்குழாய் வழியாக இரைப்பையை நோக்கிச் செல்லவைக்கிறது.

சில மணித்துளிகள் இரைப்பையில் தங்கியிருக்கும் உணவு மூலக்கூறுகளை, செரிமான திரவங்களான (Enzymes) ஹைட்ரோ குளோரிக் அமிலம், பெப்சினோஜன் (Pepsinogen), லிப்பேஸ் (Lipase) மற்றும் அமிலேஸ் (Amylase) ஆகியவை செரிமானமாக உதவுகின்றன.

நாம் உண்ணும் உணவுகள் நமக்குத் தேவையான சக்தியை அளிப்பதற்கு ஆகும் கால அளவைத் தெரிந்துகொள்ளவதன் மூலமாக செரிமானத்தையும் புரிந்துகொள்ள முடியும்.

அவற்றில் சில உணவுகள் ஜீரணமாக ஆகும் காலம் கீழே….

* காலியான வயிற்றில் தண்ணீர் – உடனடியாக குடலுக்குச் சென்றுவிடும்.

* பழங்களைச் சாறுகளாக (நீர்க்க) எடுத்துக்கொண்டால் – 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஆகும்.

* திராட்சை, ஆரஞ்சு, தர்பூசணி (கெட்டியான பழச்சாறு) மற்றும் காய்கறி சூப் – 20 முதல் 30 நிமிடங்கள்.

* பால், பாலாடைக் கட்டி, சோயா பீன்ஸ் – 2 மணி நேரம்.

* வேகவைக்காத பழங்கள் மற்றும் காய்கறிகளை அப்படியே சாப்பிட்டால் – 30 முதல் 40 நிமிடங்கள் வரை ஆகலாம்.

* வேகவைத்த காய்கறிகள் – 45 முதல் 50 நிமிடங்கள் வரை.

* வேகவைத்த தானியம் (அரிசி, ஓட்ஸ்) மற்றும் பருப்பு வகைகள் – ஒன்றரை மணி நேரம் ஆகலாம்.

* விதை மற்றும் கடலை வகைகள் – 2 முதல் 3 மணி நேரம் ஆகலாம்.

* மீன் – 30 முதல் 60 நிமிடங்கள் வரை.

* சிக்கன் – 2 மணி நேரம் ஆகலாம்.

* ஆடு மற்றும் மாட்டுக்கறி வகைகள் – 3-ல் இருந்து 4 மணி நேரம்.

எல்லோருக்குமே ஜீரணமாகும் நேரம் ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொருவரின் உடல் தன்மை, எடுத்துக்கொள்ளும் உணவு வகைகள், அளவைப் பொறுத்து வேறுபடலாம்.

இரவில், பிரியாணி, சிக்கன் என சாப்பிடுபவர்கள், உணவு செரிமானமாகும் நேரத்தை குறித்து கொள்ளுங்கள். அதற்கேற்ப தூங்க பழகுங்கள்.

இரவு உணவு உண்ட உடனே தூங்கும் பழக்கத்தை தவிர்ப்பது நல்லது. குறைந்தது 1-2 மணி நேரமாவது இடைவெளி தேவை.

இரவு உணவை 8 மணிக்குள் முடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது நல்லது.

You may also like
அத்திக்காய் கிரேவி
வெந்தயக்கீரை மசாலா சப்பாத்தி செய்ய
தக்காளி சூப்
ஆந்திரா பெப்பர் சிக்கன்

Leave a Reply