Home > அறிவியல் > பூச்சியின் உடலுக்குள் என்ன இருக்கும்?

பூச்சியின் உடலுக்குள் என்ன இருக்கும்?

மனிதனைப் போலவே, பூச்சிகளின் உடலிலும் பல்வேறு பாகங்கள் உள்ளன. இவற்றுக்கும் இதயம் உண்டு. ஆனால், அவை வித்தியாசமாக செயல்படுகின்றன.

உடலைச் சுற்றியுள்ள ஸ்பிராக்கிள்ஸ் என்னும் துளைகள் மூலமாக மூச்சு விடுகின்றன.

குடல் பகுதி, வாயிலிருந்து வயிற்றின் அடிப்பகுதி வரை டியூப் போல அமைந்திருக்கும்.

நரம்புகள் இல்லாமல், உடல் முழுவதும் ரத்தம் பாய்ந்து கொண்டிருக்கும். அனைத்து பாகங்களுமே ரத்தத்தால் சூழப்பட்டுள்ளன.

மிகப்பெரிய மற்றும் மிகச்சிறிய பூச்சி எது?

ஆப்பிரிக்காவில் உள்ள கோலியாத் பீட்டில் பூச்சி, மிகவும் பெரியதாகும். இதன் நீளம் 12 சென்டிமீட்டர், எடை 110 கிராம்.

மிகச்சிறிய பூச்சி பாராசிட்டிக் வாஸ்ப் ஆகும். இது 0.2 மில்லமீட்டர் நீளமும், 0.006 கிராம் எடையும் கொண்டது.

Leave a Reply