முன்னணி குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ் ஆப்பானது பல விதத்திலும் பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கின்றது.
பல மில்லியன் வலையானவர்கள் பயன்படுத்தும் இந்த அப்பிளிக்கேஷனை தவறாக பயன்படுத்துபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
இந்த வரிசையில் பணத்தினை பெற்றுக்கொள்ளும் முகமாக தற்போது பரிமாறப்படும் போலி வேலைவாய்ப்பு குறுஞ்செய்தி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதாவது தற்போது பிரபலமாகியுள்ள வீட்டிலிருந்து பணியாற்றுதல் எனும் தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இச் செய்தி பரிமாறப்பட்டு வருகின்றது. இவ்வாறு பணிபுரிவதற்கு நாளொன்றிற்கு இந்திய ரூபாய் மதிப்பில் 5,000 ரூபாய்கள் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச் செய்தியை ஸ்காமர்கள் உருவாக்கியுள்ளதாகவும், குறித்த செய்தியில் தரப்பட்டுள்ள இணைப்பினை கிளிக் செய்யும்போது தரவுகள் திருடப்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.