Home > அறிவியல் > 10 வினாடிகளில் கொரோனாவை உறுதி செய்யும் புதிய தொழில்நுட்பம்

10 வினாடிகளில் கொரோனாவை உறுதி செய்யும் புதிய தொழில்நுட்பம்

துருக்கியில் உள்ள பில்கென்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் டயக்னோவிர் (Diagnovir) என்ற புதிய தொற்று கண்டறிதல் நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.

நானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த கருவி, ஒருவருக்கு கொரோனா வைரஸ் நேர்மறையாக இருந்தால் 10 வினாடிகளில் முடிவைத் தரும் எனக் கூறப்படுகிறது.

இந்த முறையில், ஒரு நபரின் வாயிலிருந்து டெஸ்ட் சாம்பிளை ஒரு துணியால் எடுக்கப்பட்டு, ஒரு கரைசலுடன் கலந்து பின்னர் pathogen detection chip-ல் சேர்க்கப்படும்.

பின்னர், இந்த சிப் ஒரு ஒளிரும் சமிக்ஞையைப் பெறுவதன் மூலம் தொற்றுநோயைக் கண்டறிவதாகக் கூறப்படுகிறது.

ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் என்றால், அதன் சோதனை முடிவுகள் 5-10 வினாடிகளில் பெறப்படும் என்றும், அவருக்கு நெகட்டிவ் என்றால் 20 வினாடிகளில் முடிவுகள் பெறப்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கொரோனா வைரஸின் பாதிப்பு இருப்பதையும், இல்லாததையம் கண்டறிய இந்த சிப் மேம்படுத்தப்பட்ட ஆப்டிகல் முறைகளைப் பயன்படுத்துகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply