Home > அறிவியல் > சூரியன் – சில குறிப்புகள்

சூரியன் – சில குறிப்புகள்

சூரியன் பிறந்து 450 கோடி ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இன்னமும் ஆயிரம் முதல் மூவாயிரம் கோடி ஆண்டுகளுக்கு அது வானில் எரிந்து கொண்டிருக்கும் என விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர்.

300 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரிய ஒளியின் உதவியோடு பூமியில் உயிர்கள் தோன்றின.

200 கோடி ஆண்டுகளுக்கு முன், மூலமுதலாக தோன்றிய நுண்ணுயிர்களில் ஒன்று சூரிய ஒளியின் ஆற்றலை உணவாக மாற்றிக் கொள்ள பழகியது. எல்லா தாவரங்களும் இந்த முறையை உபயோகிக்க துவங்கின. இதற்கு ‘போட்டோ சிந்தசைஸ்’ என்று பெயர்.

கி.மு. 2300ல் எகிப்தியர்கள் ‘ரா’ என்ற சூரிய கடவுளை, எல்லாவற்றிலும் மேலான கடவுளாக வழிபட துவங்கினர்.

கி.மு. 2000-1500களில் ஸ்டோன்ஹென்ஞ்ச் என்ற கற்கள் ஊன்றப்பட்டன. நமது கிராமப்புறங்களில் சுமை தாங்கி என்று அழைக்கப்படுபவை போல இரண்டு தூண்களும் மேலே ஒரு படுக்கை கல்லும் உள்ளதாக இவை இருந்தன. இவற்றின் உதவியோடு சூரியனின் பயண திசை, பருவங்கள், சூரிய கிரகணம் ஆகியவற்றை கணக்கிட்டனர்.

கி.மு. 1500களில் கதிர் நிழல் கடிகாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கி.மு. 500களில் கிரேக்க தத்துவ ஞானியும், கணித மேதையுமான பிதாகோரஸ் அணு கோட்பாட்டை முன்வைத்தார். பார்க்கிற ஒவ்வொரு பொருளும் அணுக்களை வெளிப்படுத்துகின்றன. அவை கண்களை தாக்குகின்றன என்று அவர் கூறினார்.

1512ல் நிகோலஸ் கோபர்நிகஸ் என்பவர்தான் முதன் முதலில் சூரிய மண்டலத்தில் சூரியன்தான் மையத்தில் உள்ளது. மற்ற கோள்கள் சூரியனை சுற்றி வருகின்றன என கூறினார்.

அதுவரை சூரியன்தான் பூமியை சுற்றுவதாக கருதப்பட்டு வந்தது.

1666ல் இயக்க ஆற்றல் கோட்பாட்டை வெளியிட்டார். அவர் தான் முப்பட்டை கண்ணாடி உதவியோடு வானவில்லின் அனைத்து வண்ணங்களையும் உள்ளடக்கியது சூரியனின் வெள்ளொளி என நிரூபித்தார்.

அதன் பிறகுதான் கோபர் நிகஸின் கூற்றை உண்மை என ஏற்றுக் கொண்டனர்.

1849ல் பிரெஞ்சு நாட்டு இயற்பியலாளர் ஆர்மண்ட் ஃபிஸு ஒளியின் வேகம் சுமாராக வினாடிக்கு 1 லட்சத்து 86 ஆயிரத்து 300 மைல்கள் அல்லது 3 லட்சம் கிலோ மீட்டர் என நிரூபித்தார்.

சூரியனை கிரேக்கர்கள் ஹீலியோ எனவும், ரோமானியர்கள் ‘ஸோல்’ எனவும் அழைத்தனர்.

You may also like
கோள்கள் எட்டு

Leave a Reply