Home > அறிவியல் > ரஷ்ய மின் நிலையத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் சிவப்பாக மாறிய ஆம்பர்ன்யா நதி

ரஷ்ய மின் நிலையத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் சிவப்பாக மாறிய ஆம்பர்ன்யா நதி

ரஷ்யாவின் சைபீரிய மாகாண மின் நிலையத்தில் உள்ள எண்ணெய் தொட்டியில் ஏற்பட்ட கசிவு ஆற்றில் கலந்து மாசுபடுத்தியுள்ளதால் ஆறானது சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. ரஷ்யா நாட்டில் சைபீரியா மாகாணத்தின் நோரில்ஸ்க் நகரில் இருக்கும் மின்நிலையம் உலகின் முன்னணி நிக்கல் மற்றும் பல்லேடியம் உற்பத்தியாளரான, நோரில்ஸ்க் நிக்கலின் துணை நிறுவனத்திற்கு சொந்தமானது. மின் நிலையத்தில் உள்ள எண்ணெய் தொட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை தீடீரென எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது. அந்த தொட்டியில் இருந்த சுமார் 20,000 டன் எண்ணெய் முழுவதும் அருகில் உள்ள அம்பர்ன்யா நதியில் கலந்துள்ளது.ஆனால் இந்த கசிவு ஏற்பட்டு, எண்ணெய் முழுவதும் ஆற்றில் கலந்த இரண்டு நாட்களுக்கு பிறகு தான் அதன் பாதிப்பை கண்டறிந்த அதிகாரிகள் தற்போது ஆற்றில் கலந்துள்ள எண்ணெயை அகற்றும் பணியில் இறங்கியுள்ளனர். இந்த எண்ணெய் கசிவு 350 சதுர கிலோ மீட்டர் அளவிலான ஆற்றை மாசுபடுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் ஆம்பர்ன்யா நதி முழுவதும் எண்ணெய் கலந்துள்ளதால் அது சிவப்பு நிறமாக காட்சியளிக்கிறது.

You may also like
வீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்
கொரோனா தடுப்பூசி அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும்!
கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா
ஏப்ரல் 5: மின் இணைப்புகளில் ஏற்படப் போகும் விளைவுகள் என்ன தெரியுமா?

Leave a Reply