Home > அறிவியல் > உயிர்கள் வாழும் அழகிய பூமி

உயிர்கள் வாழும் அழகிய பூமி

சூரியனிலிருந்து மூன்றாவதாக சுற்றுகிறது பூமி கோள்.

வெள்ளி கோளிற்கும் செவ்வாய் கோளிற்கும் இடையில் பூமியின் சுற்றுப்பாதை அமைந்துள்ளது.

பூமியை ஒரே ஒரு நிலவு சுற்றுகிறது.

பூமிக்கு மட்டும்தான் ரோமானியர்களின் பெயர் இல்லை. எர்த் என்ற பெயர் பழைய ஆங்கிலச் சொல். ஆனாலும் கூட பூமியை டெர்ரா என ரோமானியர்கள் அழைத்தனர்.

12 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியின் பெரும் பகுதி நிலப்பரப்புகள் ஒன்றாக இணைந்திருந்தன. அதை பான்ஜியா என்று அழைக்கின்றனர்.

சூரியனிலிருந்து 14 கோடியே 96 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் இது சுற்றுகிறது. பூமியின் குறுக்களவு 12 ஆயிரத்து 756.3 கிலோ மீட்டர்.

பூமியின் மேல் ஓடு பல்வேறு தட்டுகளால் இணைந்தது.

ஒரு கால்பந்தின் இணைப்புகள் போல அவை சேர்ந்துள்ளன.

பூமியின் தரைப்பகுதி மற்ற கோள்களைவிட இளமையானது. பூமியின் இணைப்புத் தட்டுகள் நமது நகம் வளரும் வேகத்தில் நழுவியபடியே இருக்கின்றன.

எனவேதான் நமது பூமியின் வரைபடம் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கிறது.

சூரிய மண்டலத்தில் உயிரினம் வசிக்கக் கூடிய சரியான சூழல் நிலவும் ஒரே கோள் பூமி மட்டுமே உயிரினத்திற்கு மிகவும் அவசியமான தண்ணீர் திரவமாக நீடிக்கும் வகையில் சூரியனிலிருந்து மிகச்சரியான தூரத்தில் பூமி சுற்றுகிறது.

சூரியனை பூமி ஒருமுறை சுற்றி வர 365.26 நாட்களை எடுத்துக் கொள்கிறது.

பூமியின் மொத்த ஜனத்தொகை மட்டும் சுமார் 650 கோடி. அதன் தட்பவெப்ப நிலையை ஒரே சீராக வைத்திருக்க கடல் உதவுகிறது.

சூரியனின் வெப்ப நிலையில் என்ன மாற்றம் ஏற்பட்டாலும், கடல்தான் பூமியின் தட்பவெப்ப நிலையை பாதுகாக்கிறது.

சூரியனின் அபாயகரமான கதிர் வீச்சிலிருந்து, பூமியை அதன் சக்தி வாய்ந்த காந்தவயல் பரப்பு பொத்தி பாதுகாக்கிறது.

எவ்வித ஆடையுமின்றி பூமியில் நாம் அலைய முடியும் என்றால் அதற்கு இந்த பாதுகாப்பு அரண்தான் காரணம்.

வேற்று கிரகத்திலிருந்து யாரேனும் பூமிக்கு வந்தால், மனித நாகரீகத்தின் புராதன ஆளுமையை காண முடியும். இரவு நேரத்தில் பூமியிலிருந்து சூரிய மண்டலத்தின் அற்புதங்களை ரசிக்க முடியும்.

மனிதன் உருவாக்கிய ஆயிரக்கணக்கான அதிசயங்களை பார்வையிட முடியும்.

சீனாவில் 6 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தூரத்திற்கு மனிதன் கட்டிய மாபெரும் மதில் சுவர் உள்ளது. பூமியில் உள்ள மிகப் பெரிய செயற்கை கட்டுமானம் இதுதான்.

விண்ணிலிருந்து கூட இதை தெளிவாக பார்க்க முடியும் என கூறப்படுவதுண்டு. ஆனால் தாழ்வான சுற்றுப்பாதையில் இருந்து பார்த்தால் சீனப்பெருஞ்சுவர் மட்டுமின்றி, எகிப்தின் பிரமிடுகளும், வேறு சில உயர்ந்த கட்டிடங்களும் கூட தெரியும்.

பூமியின் மூன்றில் இரண்டு பகுதி தண்ணீர் ஆகும். எனவே வேற்று கோளைச் சேர்ந்த விண்கலங்கள் பூமியில் இறங்க வேண்டுமெனில், பத்திரமான இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.

பூமியின் தனித்தன்மை வாய்ந்த நிலப்பகுதி சூரிய மண்டலத்தின் வேறு எந்த கோள்களிலும் இருக்காது. பூமியின் இரண்டு துருவங்களிலும் மிகப்பரந்த பனிச் சிகரங்கள் உள்ளன.

பூமியின் மைய ரேகைப் பகுதிகளில் பாலைவனங்கள் காட்சியளிக்கின்றன. மிகப்பெரிய வனப்பகுதிகளும் உள்ளன. ஏராளமான உயிரினங்கள் வசிக்கின்றன.

அவை எல்லாம் இன்னும் முழுமையாக கணக்கிடப்படவில்லை. அதே சமயம் மனிதனின் வேட்டையாடும் குணத்தால் ஏராளமான உயிரினங்கள் பூமியிலிருந்தே மறைந்துவிட்டன.

You may also like
பூமியின் வரைபடம் மாறிய கதை
பூமியின் வரைபடம் மாறிய கதை
வெள்ளியை ஆராயும் விண்கலம்!
அழகிய வெள்ளியின் அபாயம்
‘பெர்சவரன்ஸ்’ விண் ஊர்தி நேற்று தனது பயணத்தை தொடங்கியது.

Leave a Reply