Home > அறிவியல் > சரகா – indian scientists series – 2

மருத்துவர் என்பவர் தன்னிடம் வரும் நோயாளியின் உடலுக்குள் அறிவு மற்றும் புரிதல் எனும் அகல்விளக்கோடு நுழைய வேண்டும். தவறினால் நோய்களுக்கு அவரால் சிகிச்சை அளிக்க முடியாது.
அவர் முதலில் நோயாளியின் சுற்றுச்சூழல் உள்பட அனைத்து விபரங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். முக்கியமாக அவருடைய சுற்றுச்சூழல்தான் நோய்க்க்கு காரணமாக இருக்கும். பிறகுதான் அவருக்கான சிகிச்சையை தெரிவிக்க வேண்டும்.
“நோயைக் குணமாக்குவதை விட நோய் வராமல் தடுப்பதுதான் மிகவும் முக்கியமானது.”
இன்றைய மருத்துவத்தில் மேற்படி வாசகம் பாப்புலராகி இருக்கிறது.
ஆனால், சரகா என்ற ஞானி 20 நூற்றாண்டுகளுக்கு முன்னரே இதை சொல்லியிருக்கிறார்.
அவர் எழுதிய ஆயுர்வேத குறிப்புகளில் இது முக்கியமான குறிப்பாக இருக்கிறது.
அவருடைய குறிப்புகளில் பல, இன்றைக்கும் உடல்நூலியல், நோய் முதலியல், கருவியல் ஆகிய துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன.
செரிமானம், வளர்சிதை மாற்றம், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றை முதலில் தெரிவித்தவர் அவர்தான். அவரைப் பொருத்தமட்டில், பித்தநீர், கபம், காற்று ஆகியவைதான் உடல் இயக்கத்துக்கு காரணமான மூன்று முக்கிய விஷயங்கள் என்று எழுதி வைத்தார்.
இவை மூன்றும்தான் சாப்பிடும் உணவுக்கு ஏற்றபடி ரத்தம், தசை, எலும்பு மஜ்ஜை ஆகியவற்றை உற்பத்தி செய்கின்றன என்றார்.
ஒரே அளவு உணவை உட்கொண்டாலும் மேற்படி மூன்றையும் அந்த உடல் உற்பத்தி செய்யும் விகிதம் மாறுபடும். அதன் காரணமாகத்தான் மனித உடல்கள் வெவ்வேறு விதமாக இருக்கின்றன.
அதாவது, ஒல்லியாக, குண்டாக, அதி சக்தி வாய்ந்ததாக என்று உடல் அளவுகளில் மாறுபாடு ஏற்படும் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மரபணு அடிப்படைக் கூறுகளையும் அவர் தெரிந்து வைத்திருந்தார். ஒரு குழந்தை ஊனமாக பிறப்பதற்கு தந்தையோ தாயோ காரணமில்லை. அதாவது அவர்களுடைய வம்சாவளி காரணம் அல்ல. அவர்களுடைய விந்தணு, அல்லது கருமுட்டையில் ஏற்படும் குறைபாடுதான் காரணம் என்று அவர் எழுதி வைத்திருக்கிறார்.
இதை இன்று ஒப்புக்கொள்கிறோம்.
மனித உடலின் பல்வேறு உறுப்புகள் குறித்தும் அவர் அறிந்து வைத்திருந்தார். நமது உடலில் மொத்தம் 360 எலும்புகள் இருப்பதாக அவர் கணித்திருந்தார். அதாவது பற்களையும் சேர்த்து.
இதயம்தான் நமது உடலின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது என்றும் தெரிந்து வைத்திருந்தார்.
கி.மு. 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மருத்துவர்களான ஆத்ரேயா, அக்னிவேஷா ஆகியோர் எழுதி வைத்த மருத்துவ குறிப்புகளை இவர்தான் திருத்தி அமைத்தார். அவற்றை பிரபலப்படுத்தினார்.
அவருடைய அந்தப் பணி இப்போதும் பாராட்டப்படுகிறது. அந்தக் குறிப்புகள் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
எது எப்படி இருந்தாலும் சரகா என்பவர் இடம் விட்டு இடம் பெயர்ந்து மக்களுக்கு மருத்துவ சேவை செய்த ஒரு முனிவர் என்று நம்பப்படுகிறது.

You may also like
பிரிட்டனில் 18 லட்சத்தை தாண்டியது- கொரோனா
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த குழந்தையின் சடலத்தை ஏற்க மறுக்கும் பெற்றோர்
கொரோனாத் தொற்று தடுப்பூசி போட்ட நால்வருக்கு பிரச்சினை?
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா

Leave a Reply