Home > அறிவியல் > அப்பலோ-1 தீப்பிடித்து 3 வீரர்கள் பலி (ஜனவரி 27, 1967) – History of space exploration

அப்பலோ-1 தீப்பிடித்து 3 வீரர்கள் பலி (ஜனவரி 27, 1967) – History of space exploration

அப்பலோ விண்கலத் திட்டத்தின்கீழ் முதல் விண்கலம் 3 விண்வெளி வீரர்களுடன் தனது பயணத்தை தொடங்க தயாராகியது.

அந்த விண்கலத்தில் கஸ் கிரிஸம், எட்வர்டு ஒயிட், ரோஜட் சாஃபே ஆகிய 3 விண்வெளி வீரர்கள் இருந்தனர்.
ஆனால், விண்கலம் புறப்படுவதற்கு முன் தீப்பிடித்து வினாடிகளில் மூவரும் உயிரிழந்தனர். ஏவுதளத்தில் விஞ்ஞானி களின் கண் முன் இந்த விபத்து நிகழ்ந்தது.

விண்வெளி வீரர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இருந்த பகுதியில் முதலில் மின்கசிவு ஏற்பட்ட தாக கருதப்பட்டது. உடனடியாக ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இருந்த பகுதிக்கு தீ பரவி சில வினாடிகளில் விண்கலம் எரிந்து சாம்பலானது.

இந்த விபத்து விஞ்ஞானிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் தள்ளிப் போடப்படலாம் என்ற அச்சம் நிலவியது.

விண்கலம் பயணத்துக்கு தயாரான நிலையில் விண்வெளி வீரர்களில் ஒருவரான கிரிஸம், இந்த பயணத்தில் சில சிரமங்கள் இருப்பதாக எழுதியிருந்தார்.

“நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் சோதனை எளிதானதல்ல. எந்தவொரு சோதனையும் எடுத்தவுடன் வெற்றி பெறுவது இல்லை. இந்த சோதனை முயற்சியிலும் நாம் சிலரை இழக்க நேரும். அப்படி ஒருவேளை இழப்புகள் ஏற்பட்டாலும் அதை நமது விண்வெளி ஆராய்ச்சி திட்டத்திற்கு மிகப்பெரிய விலை என்று கருதிவிடக் கூடாது.”

அவர் சொன்னது சரிதான். ஆராய்ச்சி அத்துடன் நின்றுவிடவில்லை. இருந்தாலும் நாஸா மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. விண்கலத்தை சரியாக பராமரிக்கவில்லை என்று குறை கூறப்பட்டது.

சில காலம் விண்கலப் பயணம் தாமதம் ஆனாலும், விரைவிலேயே சோதனை முயற்சிகள் தொடங்கின. 1968ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி அப்பலோ-7 விண்கலம் விண்வெளி வீரர்களுடன் தனது முதல் பயணத்தை தொடங்கியது.

You may also like
நிலவில் இறங்க ஒரு முன்னோட்டம் (மே 22, 1969) – History of space exploration
நிலவைச் சுற்றிய மனிதர்கள் (டிசம்பர் 24, 1968) – History of space exploration
மனிதகுல வரலாறு – ஆப்பிரிக்காவில் பாண்டு மக்கள்
மனிதகுல வரலாறு – ஆப்பிரிக்க நாகரிகம்

Leave a Reply