Home > அறிவியல் > விண்கலம் வெடித்து சோவியத் வீரர் பலி (ஏப்ரல் 24, 1967) – History of space exploration

விண்கலம் வெடித்து சோவியத் வீரர் பலி (ஏப்ரல் 24, 1967) – History of space exploration

அமெரிக்க விண்கலம் புறப்படுவதற்கு முன் 3 வீரர்களை பலிகொண்ட சம்பவம் முடிந்து 3 மாதங்கள்கூட முடியவில்லை.

சோவியத் யூனியனின் பங்குக்கு ஒரு விண்கலம் வெடித்து விண்வெளி வீரர் ஒருவரை பலி வாங்கியது.

விளாடிமிர் கோமரோவ். 40 வயதான விண்வெளி வீரர் சோயுஸ்-1 விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றிருந்தார். மிகவும் அனுபவம் வாய்ந்த விண்வெளி வீரர் இவர். இரண்டாவது முறையாக சோயுஸ்-1 விண்கலத்தில் பயணம் மேற்கொண்டிருந்தார்.

விண்வெளியில் தனது ஆராய்ச்சிகளை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு பூமிக்குத் திரும்பினார். ஆனால், பூமியின் எல்லைக்குள் விண்கலம் நுழைந்தபோது பூமியிலிருந்து 4 மைல் உயரத்தில், வானில் அது வெடித்துச் சிதறியது.

துணிச்சல்மிக்க, அனுபவமிக்க விண்வெளி வீரரை சோவியத் யூனியன் இழந்துவிட்டதாக சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி இறங்கல் தெரிவித்தது.

அவருடைய சாம்பல் கிரெம்ளின் மாளிகை சுவற்றில் அடக்கம் செய்யப்பட்டது. சோவியத் யூனியனில் இறந்தவர்க ளுக்கு கிடைக்கும் மிக உயரிய மரியாதை இது.

இந்த இழப்பு அமெரிக்காவையும் ரஷ்யாவையும் ஒரு வகையில் இணைக்க உதவியது. இரு நாடுகளுமே அடுத்தடுத்து ஒரே மாதிரியான இழப்பை சந்தித்து இருந்தன. எனவே விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களில் இரு நாடுகளும் கூடுதல் ஒத்துழைப்பை உத்திரவாதப்படுத்தின.

சோயுஸ்-1 விண்கலம் கனரக வகையைச் சேர்ந்தது. நிலவில் மனிதனை இறக்குவதற்காக பிரத்யேகமாக இந்த விண்கலம் உருவாக்கப்பட்டு இருந்தது. அதை சோதனை செய்வதற்காகவே கோமரோவ் விண்வெளிக்கு சென்றிருந்தார்.

விண்வெளிக்குச் சென்றுவிட்டு பூமியின் காற்று மண்டலத் துக்குள் நுழைந்தபோது விண்கலம் தீப்பற்றியது. ஆனால், விண்கலம் தீப்பற்றியவுடன் அதிலிருந்து தப்புவதற்கு வழியிருந் தும் அதை கோமரோவ் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று ஒரு விமர்சனம் எழுந்தது.

சோயுஸ்-1 விண்கலம் தொடக்கத்திலிருந்தே சில பிரச்சினை களை சந்தித்தது. மனிதர்களை ஏற்றிச் செல்லும் வகையில் அது தகுதி பெற்றிருக்கவில்லை என்று புகார்கள் எழுந்தன.

ஆனால், மாமேதை லெனின் அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நிலா பயணத்தை விரைவு படுத்த கம்யூனிஸ்ட் கட்சி உத்தரவிட்டிருந்தது. அதன் காரணமாகத்தான் இந்த அவசர சோதனை முயற்சி மேற்கொள் ளப்பட்டது. இருந்தாலும், அடுத்த 2 ஆண்டுகள் விண்வெளி ஆராய்ச்சியில் சோவியத் யூனியன்தான் முன்னிலை வகித்தது.

ஆனால், 1969ஆம் ஆண்டு அமெரிக்காவின் அப்பலோ-11 விண்கலம் நிலவில் மனிதனை இறக்கி சோவியத் யூனியனை பின்னுக்குத் தள்ளியது.

You may also like
இரண்டாவது பயணமும் வெற்றி (நவம்பர் 19, 1969) – History of space exploration
நிலவில் மனிதன் (ஜூலை 16, 1969) – History of space exploration
நிலவில் இறங்க ஒரு முன்னோட்டம் (மே 22, 1969) – History of space exploration
நிலவைச் சுற்றிய மனிதர்கள் (டிசம்பர் 24, 1968) – History of space exploration

Leave a Reply