Home > அறிவியல் > வெள்ளிக் கோளில் சோவியத் விண்கலம் (அக்டோபர் 18, 1967) – History of space exploration

வெள்ளிக் கோளில் சோவியத் விண்கலம் (அக்டோபர் 18, 1967) – History of space exploration

நிலா பயணத்தில் தேக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சோவியத் விஞ்ஞானிகளின் பார்வை வெள்ளிக் கோளின் பக்கம் திரும்பியது.

வெள்ளிக் கோளை ஆய்வு செய்யும் முயற்சி ஏற்கெனவே தொடங்கிவிட்டது. ஆனால் தூரத்திலிருந்து மட்டுமே அந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன.

வெள்ளிக் கோளின் நிஜத் தன்மை யாருக்கும் தெரியாது. அந்த கோளை அடர்த்தியான மேகம் சூழ்ந்திருந்தால் அதன் உண்மையான அமைப்பு தெரியாமல் இருந்தது. வெள்ளிக் கோளின் ரகசியத்தை அறிய அதில் விண்கலத்தை இறக்குவது என சோவியத் யூனியன் முடிவு செய்தது.

வெனேரா-4 என்ற விண்கலம் வெள்ளிக் கோளுக்குப் புறப்பட்டது. 4 மாதங்கள் பயணம் செய்து 1967ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி அந்த விண்கலம் வெள்ளிக் கோளின் மேக மூட்டத்தை கிழித்துக் கொண்டு உட்புகுந்தது.

மேக மூட்டத்தைத் தாண்டிய உடனேயே விண்கலம் தகவல்களை அனுப்பத் தொடங்கியது. அங்கு நிலவியிருந்த வாயுக்கள் குறித்தும் தட்பவெப்பநிலை மற்றும் அழுத்தம் குறித்தும் ஏராளமான தகவல்களை விண்கலம் அனுப்பியது.

வெள்ளிக் கோளின் வளிமண்டலத்துக்குள் ஆய்வு நடத்துவது இதுதான் முதன்முறையாகும். விண்கலத்தை வெள்ளிக் கோளின் மேற்பரப்பில் பத்திரமாக தரையிறக்க சோவியத் யூனியன் விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டார் கள்.

அங்கு ஒருவேளை கடல் இருந்தால் அதில் விண்கலம் மூழ்கிவிடக் கூடும். அப்படி மூழ்கினாலும் பூமிக்கு தகவல்களை அனுப்பும் வகையில் கருவிகள் பொருத்தப்பட்டு இருந்தன.

ஆனால் மேகத்தைக் கிழித்துக் கொண்டு உட்புகுந்த விண்கலம் அடுத்த 94 நிமிடங்களில் பூமியுடன் தொடர்பை இழந்தது. அந்த சமயத்தில் விண்கலம் வெள்ளிக் கோளின் மேற்பரப்பில் இருந்து 25 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தது.

விண்கலம் அனுப்பிய சமிக்ஞைகளை ஜோட்ரல் பேங்க் டெலஸ்கோப்பும் உள்வாங்கியது. இந்த ஆய்வில் பங்கேற்பதற்கு சோவியத் விஞ்ஞானிகள் அனுமதி அளித்திருந்தனர். ஏற்கெனவே வெனேரா-1, 2, 3 ஆகிய மூன்று விண்கலங்கள் வெள்ளிக் கோளில் இறங்கும் முயற்சியில் தோல்வியடைந் திருந்தன.

வெனேரா-4 வெள்ளிக் கோளில் இறக்கப்பட்ட சில தினங்களில் அமெரிக்கா அனுப்பிய மெரைனர்-5 விண்கலம் வெள்ளிக் கோளை மிக நெருக்கமாக ஆய்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அந்த விண்கலம் வெள்ளிக் கோளின் தரையிறங்காது. அதே சமயம் 4000 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து சக்தி வாய்ந்த சாதனங்கள் மூலம் முக்கியமான ஆய்வுகளை நடத்தும் என்று கூறப்பட்டது.

வெனேரா-4 விண்கலம் அனுப்பிய தகவல்களில் பல முக்கியமான அம்சங்கள் இருந்தன. அங்கு பூமியைக் காட்டிலும் 90 மடங்கு அழுத்தம் அதிகம். அதாவது, கடலுக்கடியில் 3 ஆயிரம் அடி ஆழத்தில் எவ்வளவு அழுத்தம் இருக்குமோ அந்த அளவுக்கு வெள்ளிக் கோளில் சாதாரணமாகவே அழுத்தம் இருக்கும்.

வெனேரா-4க்கு பிறகு மேலும் 12 வெனேரா விண்கலங்கள் அனுப்பப்பட்டன. வெனேரா-7 விண்கலம் 1970ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெள்ளிக் கோளை வெற்றிகரமாக தரையிறங்கியது.

You may also like
இரண்டாவது பயணமும் வெற்றி (நவம்பர் 19, 1969) – History of space exploration
நிலவில் மனிதன் (ஜூலை 16, 1969) – History of space exploration
நிலவில் இறங்க ஒரு முன்னோட்டம் (மே 22, 1969) – History of space exploration
நிலவைச் சுற்றிய மனிதர்கள் (டிசம்பர் 24, 1968) – History of space exploration

Leave a Reply