Home > அறிவியல் > நிலவைச் சுற்றிய மனிதர்கள் (டிசம்பர் 24, 1968) – History of space exploration

நிலவைச் சுற்றிய மனிதர்கள் (டிசம்பர் 24, 1968) – History of space exploration

முதலில் வெறும் விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பினார்கள். அதை பூமியைச் சுற்ற வைத்தார்கள்.
பிறகு விலங்குகளை விண்கலங்களில் அனுப்பி சோதனை நடத்தினார்கள்.

அதன் பின்னர் மனிதர்கள் விண்வெளிக்குச் சென்று திரும்பினார்கள்.
அங்கேயே சில நாட்கள் தங்கியிருந்து சோதனை நடத்தினார்கள்.

நிலவில் இறங்க முயற்சி செய்தார்கள். அதற்குமுன் வெறும் விண்கலங்களை நிலவில் இறக்கி சோதனை நடத்தினார்கள்.

படிப்படியாக தங்கள் முயற்சியில் முன்னேறிய அவர்கள் நிலவுக்கு மனிதனை அனுப்ப முடியும் என்ற முடிவுக்கு வந்தார்கள்.

அமெரிக்காவும் சோவியத் யூனியனும் நிலவில் யார் முதலில் இறங்குவது என்ற போட்டியில் கடுமையாக ஈடுபட்டார்கள். இந்த போட்டியில் அமெரிக்காவின் கை சற்று ஓங்கியது.

1968ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதி அப்பலோ-8 என்ற விண்கலம் நிலவின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக சுற்றத் தொடங்கியது.

பூமியைச் சுற்றிய விண்கலங்கள் நிலவைச் சுற்றுவது இதுதான் முதன்முறை. அதிலும் விண்கலத்தில் 3 விண்வெளி வீரர்களும் இருந்தார்கள்.

ஃப்ரான்க் போர்மேன், ஜேம்ஸ் லோவெல், வில்லியம் ஆண்டெர்ஸ் என்ற 3 விண்வெளி வீரர்கள் அப்பலோ விண்கலத்தில் இருந்தனர். அவர்கள் நிலவின் மேற்பரப்புக்கு 125 கிலோ மீட்டர் உயரத்தில் நிலவை சுற்றத் தொடங் கினார்கள்.

நிலவின் மேற்பரப்பை அந்த விண்கலம் மிக நெருக்கமாக படம் பிடித்து, அந்த படங்கள் உலகில் அனைத்து தொலைக் காட்சிகளிலும் ஒளிபரப்பாயின.

“நிலவின் மேற்பரப்பு சாம்பல் வண்ணத்தில் இருக்கிறது. பிளாஸ்டர் ஆஃப் பாரிஸைப் போல தோற்றம் அளிக்கிறது” என்று ஜோம்ஸ் லோவெல் தெரிவித்தார்.

சற்று நேரத்தில் விண்கலத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதாவது பூமியின் இருப்பவர்களின் பார்வையில் படாத நிலவின் மறுபக்கத்திற்கு விண்கலம் சென்றுவிட்டது.

45 நிமிடங்கள் பரபரப்பாக ஓடின. பின்னர் மீண்டும் விண்கலம் நிலவின் முன் பக்கத்திற்கு வந்தது. உடனே தகவல் தொடர்பும் இணைக்கப்பட்டது.


முதல் தடவை 125 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றிய விண்கலம் அடுத்து 110 கிலோ மீட்டர் உயரத்திற்கு இறங்கி சுற்றியது.

பூமியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தொடங்கின. விண்வெளி வீரர்கள் நிலவைச் சுற்றியபடியே பூமியில் உள்ளவர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார் கள்.

மூவரும் நல்ல உடல் நலத்துடன் பூமியில் இருப்பதைப் போலவே இருந்தார்கள்.

20 மணி நேரம் நிலவைச் சுற்றிய அவர்கள் பின்னர் பூமிக்குத் திரும்பினார்கள். அமெரிக்காவில் தேசிய ஹீரோக்களாக அவர்கள் வரவேற்கப்பட்டனர்.

You may also like
இரண்டாவது பயணமும் வெற்றி (நவம்பர் 19, 1969) – History of space exploration
நிலவில் மனிதன் (ஜூலை 16, 1969) – History of space exploration
நிலவில் இறங்க ஒரு முன்னோட்டம் (மே 22, 1969) – History of space exploration
மனிதகுல வரலாறு – ஆப்பிரிக்காவில் பாண்டு மக்கள்

Leave a Reply