Home > அறிவியல் > நிலவில் இறங்க ஒரு முன்னோட்டம் (மே 22, 1969) – History of space exploration

நிலவில் இறங்க ஒரு முன்னோட்டம் (மே 22, 1969) – History of space exploration

அப்பலோ-8 விண்கலத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அப்பலோ-9 விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது.

அந்த விண்கலம் தன்னுடன் ஒரு துணைக் கோள் ஒன்றை எடுத்துச் சென்றது. தாய்க் கலத்திலிருந்து அந்த துணைக் கோள் நிலவின் மேற்பரப்புக்கு விடுவிக்கப்பட்டது. பின்னர் அந்த துணைக் கோள் தாய்க் கலத்துடன் இணைந்து பூமிக்குத் திரும்பியது.

இந்த சோதனையை அடுத்து அப்பலோ-10 விண்கலம் தன்னுடன் ஒரு துணைக் கோளை எடுத்துக் கொண்டு நிலவுக்கு பயணம் மேற்கொண்டது.

1969ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி அப்பலோ-10 விண்கலத்திலிருந்து நிலவின் மேற்பரப்புக்கு துணைக் கோள் விடுவிக்கப்பட்டது.

ஸ்நூப்பி என்று பெயரிடப்பட்ட அந்த துணைக் கோள் நிலவின் மேற்பரப்புக்கு 14 கிலோ மீட்டர் உயரம் வரை இறங்கியது. தாய்க் கலம் நிலவை சுற்றிக் கொண்டிருக்க துணைக் கோள் நிலவின் மேற்பரப்புக்கு சென்றது.

ஆனால் அது நிலவின் தரையில் இறங்காமல் தாய்க் கலத்தின் ஆணையை ஏற்று மீண்டும் வந்து இணைந்து கொண்டது.

தாய்க் கலமான அப்பலோ-10 விண்கலத்திலிருந்து தாமஸ் ஸ்டஃபோர்டு, யூஜென் செர்னன் என்ற இரண்டு விண்வெளி வீரர்கள் இந்த சாகசத்தை நிகழ்த்தினார்கள்.


நிலவின் மேற்பரப்பு எப்படி இருக்குமோ என்பதை உறுதி செய்து கொள்வதற்காக விஞ்ஞானிகள் படாதபாடு பட்டார்கள். ஏராளமான சோதனைகளை நடத்தினார்கள்.

அப்பலோ-10 விண்கலம் நிலவில் மனிதன் காலடி பதிக்க ஒரு முன்னோட்டமாக அமைந்தது.

நிலவை சுற்றிக் கொண்டே அதன் மேற்பரப்புக்கு மனிதர்களை அனுப்ப முடியும் என்பதை இந்த விண்கலம் உறுதி செய்தது.

You may also like
பேரூராட்சி சுழற்சிமுறை ஒதுக்கீடுகளில் அதிமுக சதி – முதல்வர் கவனிக்க கோரிக்கை
என்னதான் இருந்தாலும் ஜெயலலிதாவைப் போல வருமா?
நிழல்கள் – ஆதனூர் சோழன் கவிதைகள்
அடுக்கடுக்காய்… – ஆதனூர் சோழன் கவிதைகள்

Leave a Reply