Home > அறிவியல் > இரண்டாவது பயணமும் வெற்றி (நவம்பர் 19, 1969) – History of space exploration

இரண்டாவது பயணமும் வெற்றி (நவம்பர் 19, 1969) – History of space exploration

நிலவில் மனிதன் காலடி பதித்து 4 மாதங்களில் மீண்டும் ஒரு நிலா பயணம் வெற்றி பெற்றது.

1969 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் தேதி அப்பலோ-12 விண்கலம் புறப்பட்டது. விண்கலத்தை ஏவுவதற்கு முன் ஹைட்ரஜன் டேங்க்கில் சிறு கசிவு ஏற்பட்டதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

உடனடியாக, விரைந்து அதை சரி செய்தனர்.
புறப்பட்ட பிறகு மீண்டும் ஒரு ஆபத்து ஏற்பட்டது. மின்னல் தாக்கியதால், அப்பலோவின் முக்கியமான சாதனங்கள் சில வினாடிகள் இயக்கத்தை நிறுத்தின. ஆனால், உடனடியாக மின் வினியோகம் சீராகியது.

அப்போதிருந்து விண்கலம் சீராகவே இயங்கியது. ஆனால், முன்னர் பழுதான தொலைக்காட்சி கேமரா கடைசிவரை இயங்கவில்லை. அந்த கேமராக்கள்தான் முதன்முதலாக நிலவின் தோற்றத்தை நேரடியாக ஒளிபரப்புவதற்காக இணைக்கப் பட்டிருந்தன.

விண்கலத்தில் பீட் கோன்ராட், ஆலன் பீன் ஆகிய இரு விண்வெளி வீரர்கள் இருந்தனர். அவர்கள் இருவரும் புயல்களின் கடல் பகுதியில் இருந்த இரு பள்ளத் தாக்குகளுக்கு இடையில் விண்கலத்தை பத்திரமாக இறக்கினர்.

பின்னர், பீட் கோன்ராட் விண்கலத்திலிருந்து முதலில் இறங்கினார். நிலவில் இறங்கிய கலத்திற்கு இண்டெர்பிட் என்று பெயரிடப்பட்டு இருந்தது.

நிலவில் காலடி பதித்த மூன்றாவது நபராக கோன்ராட் இடம்பெற்றார்.
கலத்திலிருந்து இறங்குவதற்கு அமைக்கப்பட்ட ஏணி சிறிது குட்டையாக இருந்தது. எனவே, கடைசி படிக் கட்டிலிருந்து கோன்ராட் குதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அப்பலோ-11 விண்கலம் இறங்கிய டிரான்குய்லிட்டி பிரதேசத்தில் இருந்ததை விட நிலவின் மேற்பரப்பு மென்மையாக இருப்பதாக கோன்ராட் தெரிவித்தார்.

நேரடி ஒளிபரப்புக்கான தொலைக்காட்சி கேமரா ஏற்கெனவே பழுதாகியிருந்தது. தரையிறங்கிய 15 நிமிடங்களில் மற்றொரு தொலைக்காட்சி கேமராவும் பழுதானது. கட்டுப்பாட்டு விண்கலத்தில் கேமராவை இயக்கிய ஆலன் பீன் கேமராவை சூரியனுக்கு நேராக திருப்பியதால் லென்சுகள் தெறித்துவிட்டன.

சூரியனின் உஷ்ணம் அந்த அளவுக்கு கடுமையாக இருந்தது.
1967 ஆம் ஆண்டு சர்வேயர்-3 என்ற விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது. அந்த விண்கலத்தை மீட்டுவருவது, இந்தப் பயணத்தின் நோக்கங்களில் ஒன்று.

இண்டர்பிட் என்ற தரையிறங்கு கலம் இறங்கிய இடத்திலிருந்து 600 அடி தூரத்தில், சர்வேயர்-3 விண்கலம் இருப்பதை கோன்ராட் பார்த்தார். சிறு பள்ளத்தாக்கின் விளிம்பில் அது இருந்தது.

நிலவில் இருவரும் ஏழரை மணி நேரம் தங்கியிருந்தனர். இரண்டு முறை அவர்கள் நிலவில் நடந்தனர்.
சர்வேயர்-3 விண்கலத்தின் பாகங்கள் சிலவற்றை வெற்றிகரமாக மீட்டு எடுத்து வந்தனர்.

You may also like
நிலவில் மனிதன் (ஜூலை 16, 1969) – History of space exploration
நிலவில் இறங்க ஒரு முன்னோட்டம் (மே 22, 1969) – History of space exploration
நிலவைச் சுற்றிய மனிதர்கள் (டிசம்பர் 24, 1968) – History of space exploration
மனிதகுல வரலாறு – ஆப்பிரிக்காவில் பாண்டு மக்கள்

Leave a Reply