Home > அறிவியல் > மேகங்கள் எப்படி உருவாகின்றன?

மேகங்கள் எப்படி உருவாகின்றன?

கடல், ஆறு மற்றும் நிலப்பகுதிகளில் உள்ள நீர், சூரியக் கதிர்களால் வெப்பமாகிறது. இதையடுத்து தண்ணீர் நீராவியாக மாறி, வானத்தை நோக்கி  செல்கிறது.

வாயு வடிவில் இருப்பதால் நீராவியை கண்ணால் பார்க்க முடியாது.

மேலே செல்லும் நீராவி  குளிர்விக்கப்பட்டு, சிறு நீர்த்துளிகளாகவோ, பனிக்கட்டிகளாகவோ மாறுகிறது.

போதுமான அளவுக்கு நீர்த்துளிகள் அல்லது சிறு பனிக்கட்டிகள் ஒன்று சேர்ந்தவுடன் அது மேகமாக மாறுகிறது.

மேகங்கள் ஏன் பல வடிவங்களில் இருக்கின்றன?

மேகக்கூட்டங்கள் வானத்தில் எவ்வளவு உயரத்தில் உருவாகின்றனவோ, அதைப் பொருத்தே  வடிவம் பெறுகின்றன.

மிக உயரமான வானில்  தோன்றும் மேகங்கள், வெள்ளை நிறத்தில் இறகுகளைப் போல இருக்கும்.  அதற்கு கீழே சற்று மென்மையான மேகக்கூட்டம் உருவாகும்.

எனினும், மேகங்களின் வடிவங்கள் மாறுவதற்கு உயரம் மட்டுமே காரணமல்ல. மேலே வீசும் காற்றின் வேகத்துக்கு தகுந்தபடியே மேகங்களின் வடிவம் மாறுகிறது.

சில மேகங்கள் கருப்பாகவும், சில மேகங்கள்  வெள்ளையாகவும் இருப்பது ஏன்?

மேகக்கூட்டங்களில் சில மென்மையானவை யாகவும், சில  அடர்த்தியானவையாகவும் இருக்கின் றன.

மென்மையான மேகக்கூட்டங்களில் சூரியஒளி எளிதில் பாய்ந்து செல்லும். அடர்த்தியான மேகக்கூட்டங்களில் சூரியஒளி எளிதில் ஊடுருவ  முடியாது. 

சூரியஒளி ஊடுருவக் கூடிய மேகங்கள் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கின்றன. சூரியஒளி நுழைய முடியாத மேகங்கள் கருமையான நிறத்தில் தோன்றுகின்றன.

You may also like
48 எம்.பி ஸ்மார்ட் போன் அறிமுகம்
தானியங்கி சோப் நுரை அளிக்கும் இயந்திரம்” – சியோமி அறிமுகம்
வீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்
கொரோனா தடுப்பூசி

Leave a Reply