Home > அறிவியல் > ஆலங்கட்டி மழை உருவாவது எப்படி?

ஆலங்கட்டி மழை உருவாவது எப்படி?

வானின் உயரமான பகுதிகளில் வெப்ப காலங்களில் கூட கடும் குளிர் நிலவும். இதனால், மேகத்தின் உயர்ந்த பகுதியில் நீர்த்துளிகள், பெரிய பனிக்கட்டிகளாக உறைந்து விடுகின்றன. இவை, ஆலங்கட்டிகளாக மாறுகின்றன.

ஆலங்கட்டிகள் வானிலிருந்து வேகமாக விழுகின்றன. இந்தக் கட்டிகள் பெரிதாக இருப்பதால் கரைவதற்கு போதிய அவகாசம் இல்லாமல் சிறு சிறு பனிக்கட்டிகளாகவும் சில நேரங்களில் பெரிய பனிக்கட்டிகளாகவும் பூமியில் விழுகின்றன.

பெரிய ஆலங்கட்டிகள் உருவாவது எப்படி?

பனிக்கட்டிகள் கனமாக மாறும்போது, அவை கீழே வருகின்றன. ஆனால், குமுலோ-நிம்பஸ் மேகத்திற்குள் மேல் நோக்கி கடும் காற்று வீசும்.

பனிக்கட்டிகளை மேலே தள்ளும் அளவுக்கு இந்தக் காற்று வலுவாக இருக்கும். இதையடுத்து, அதிக அளவிலான நீர்த்துளிகள் உறைந்து பெரிய பனிக்கட்டிகளாக மாறும். இந்த நிகழ்வு தொடரும் போது மிகப்பெரிய அளவிலான ஆலங்கட்டிகள் உருவாகின்றன.

You may also like
கடும் பனி மூட்டத்தால் சிக்கித் தவிக்கும் ஐக்கிய அரபு அமீரகம்

Leave a Reply