Home > அறிவியல் > மனிதகுல வரலாறு – புது விதமான மதம்

மனிதகுல வரலாறு – புது விதமான மதம்

கிரேக்கர்களுக்கு முன்பு பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு நாகரிகத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்தனர். அவர்கள் ஆண் கடவுளரையும் பெண்வழிக் கடவுளரையும் வணங்கினர்.

அவையும் அச்சமூட்டும் வகையில் உருவகப் படுத்தப்பட்டன. அந்த கடவுளரையே மிக முக்கியமாக மதித்தனர். வினோதமான விலங்குகளைப் போலவும், அரக்கர்களைப் போலவும் முரட்டுதனமான தோற்றத்துடன் அந்த கடவுளர்கள் வடிவமைக்கப்பட்டனர்.

கடவுளுக்கு தொண்டு செய்து, அவற்றை சாந்தப்டுத்துவதே தங்கள் வாழ்வின் முழுக் கடமை என்பதாக மக்கள் நம்பினர்.

கிரேக்கர்களுக்கு மதம் குறித்து புதிய பார்வை இருந்தது. கடவுளும், மனிதனும் ஒருவருக்கொருவர் பிணைப்பாக வாழ்ந்து ஒருவர் மற்றவருக்கு சேவை செய்ய வேண்டும் என்று கிரேக்கர்கள் நம்பினர்.

கடவுளும் மனிதர்களைப் போலவே உருவம் கொண்டிருப்பதாகவும், கடவுளர்களுக்கும் மக்களைப் போன்ற குணங்கள் இருப்பதாகவும் அவர்கள் கருதினர்.

பொறாமை, காதல், விறுப்பு மற்றும் வெறுப்பு குணங்கள் கடவுளர்களுக்கும் இருக்கின்றன. தங்கள் கடவுளர்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். குடும்பமாக வாழ்கின்றனர். சமயத்தில் கொலையும் செய்கின்றனர் என்பதாக கிரேக்கர்கள் கதைகள் புனைந்தனர்.

மக்களுக்கும், கடவுளுக்கும் உள்ள ஒரே வேறுபாடு மாயதந்திர சக்தி மட்டுமே என்பது கிரேக்கர்களின் முடிவாக இருந்தது. இந்த சக்தி மனிதர்களுக்கு இல்லை என்று கருதினர். கிரேக்க மாணவர்கள் மிகச்சிறந்த தனிமனிதர்களாக உருவாகும் வகையில் கற்பிக்கப் பட்டனர்.

அப்போதுதான் அவர்கள் கடவுளின் சாயலாக மாறமுடியும் என்பது அவர்களுடைய நம்பிக்கையாக இருந்தது. ஒவ்வொரு கிரேக்க மாநிலத்திலும் மக்கள் தங்கள் பகுதியை பாது காப்பதற்காக தனித் தனி கடவுளரை உருவாக்கியிருந்தனர்.

தங்கள் மீது கடவுளின் கருணைப் பார்வை விழவேண்டும் என்பதற்காக அவர்கள் அந்த கடவுளை வணங்கினர். அந்த கடவுளரை கெஞ்சினர். கிரேக்க குடிமக்கள் அனைவருக்கும் பொதுவான தலைமைக் கடவுளாக ஜீயஸ் கருதப்பட்டார்.

கிரேக்கத்தின் வடக்குப் பகுதியில் உள்ள ஒலிம்பஸ் மலை யின் உச்சியில் மிகவும் சக்திவாய்ந்த மிக முக்கியமான 12 கடவு ளர்கள் வாழ்வதாக கிரேக்கர்கள் நம்பினர். இந்த புனிதமான மலை யில் இருந்தபடி இயற்கை உலகம் முழுவதையும் அந்த கடவுளர்கள் ஆட்சி செய்வதாகவும், தனிமனிதர்களின் வாழ்க் கையை அவர்கள்தான் திட்டமிடுவதாகவும் கிரேக்கர்கள் நினைத்தனர்.

You may also like
அலங்காநல்லூரில் உதயநிதி பிறந்தநாள் விழா!
பேரூராட்சி சுழற்சிமுறை ஒதுக்கீடுகளில் அதிமுக சதி – முதல்வர் கவனிக்க கோரிக்கை
என்னதான் இருந்தாலும் ஜெயலலிதாவைப் போல வருமா?
நிழல்கள் – ஆதனூர் சோழன் கவிதைகள்

Leave a Reply