Home > அறிவியல் > மனிதகுல வரலாறு – ட்ரோஜன் குதிரை

மனிதகுல வரலாறு – ட்ரோஜன் குதிரை

இலியட், ஒடிஸி என்ற இரண்டு புரணாங்களை கிரேக்கர்கள் நம்பினர். இந்த புராணங்கள் பள்ளியிலேயே கற்பிக்கப்பட்டன.

இவற்றிலிருந்து உதாரணங்கள் எடுத்தாளப்பட்டு, தனிமனித வாழ்க்கை சிறப்பாக அமைய அவை உதவுவதாக கற்பிக்கப்பட்டது.

இந்த புராணங்களில் இலியட் என்ற புரா ணத்தில் வரும் கதையில் ஒரு மிகப்பெரிய மரக்குதிரை வரும். ஹெலன் ஆஃப் ட்ராய் என்ற அந்த கிளைக் கதையில், ட்ராய் நகரின் இளவரசன் பாரீஸ், கிரேக்க நாட்டின் ஸ்பார்ட்டா மன்னரின் மெலனஸின் மனைவி ஹெலனை கடத்திவிடுவார்.

இதையடுத்து, ஹெலனை முன்பு விரும்பிய மன்னர் களையும் துணைக்கு அழைத்துக் கொண்டு ட்ராய் மீது போர் தொடுத்தார் மெலனஸ். அந்த போருக்கு அகாமாமென் என்ற தளபதி தலைமை வகித்தான்.

இந்தப் போர் 10 ஆண்டுகள் வரை நீடித்தது. ட்ராய் நகரைச் சுற்றி கடலுக்குள் ஆயிரக்கணக்கான கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இருந்தாலும், ட்ராய் நகருக்குள் நுழைய முடியவில்லை.

வரலாற்றில் இதுதான் மிகநீண்ட முற்றுகையாக கருதப்படுகிறது. ட்ராய் நகருக்குள் நுழைய எதிரிகள் ஒரு தந்திரம் செய்தனர்.

இரவோடு இரவாக தங்கள் ஆயுதங்களைக் கொண்டு பிரமாண்டமான மரக்குதிரையை வடிவமைத்தனர். அந்தக் குதிரைக்குள் நூற்றுக்கணக்கான வீரர்கள் நுழைந்து ஒளிந்து கொண்டனர். படகுகள் அனைத்தும் ட்ராய் நகரின் மற்றொரு பகுதியில் மறைவாக நிறுத்தப்பட்டன.

மரக்குதிரையை பார்த்த ட்ராய் மன்னர், எதிரிகள் ஓடிவிட்டதாக தப்புக் கணக்கு போட்டார். அந்த மரக்குதிரை ட்ராய் நகர மக்களுக்கு எதிரிகள் அளித்த பரிசு என்று அதை நகருக்குள் கொண்டு சென்றார்.

ஆனால், இரவு நேரத்தில் அந்த மரக்குதிரைக்குள் இருந்த வீரர்கள் வெளிப்பட்டு ட்ராய் நகர கோட்டைக் கதவுகளை திறந்தனர்.

நகரம் முழுவதையும் தீக்கிரையாக்கினர். எதிரிநாட்டு படையினர் நகருக்குள் நுழைந்து நகரை நாசம் செய்தனர்.

You may also like
அலங்காநல்லூரில் உதயநிதி பிறந்தநாள் விழா!
பேரூராட்சி சுழற்சிமுறை ஒதுக்கீடுகளில் அதிமுக சதி – முதல்வர் கவனிக்க கோரிக்கை
என்னதான் இருந்தாலும் ஜெயலலிதாவைப் போல வருமா?
நிழல்கள் – ஆதனூர் சோழன் கவிதைகள்

Leave a Reply