Home > அறிவியல் > மனிதகுல வரலாறு – பெலோபொனிஸியன் யுத்தம்

மனிதகுல வரலாறு – பெலோபொனிஸியன் யுத்தம்

காலம் செல்லச் செல்ல மற்ற மாநிலங்களைவிட ஏதென்ஸ் செல்வத்திலும் அதிகாரத்திலும் ஓங்கி வளர்ந்தது.

ஏதென்ஸின் செல்வாக்கு அதிகரிக்க அதிகரிக்க மற்ற மாநிலங்கள் அனைத்தும் ஏதென்ஸுக்கு கட்டுப்பட்டு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டன.

இந்த விசுவாசம் பெர்சியர்கள் கிரீஸ்மீது போர் தொடுத்த போது மேலும் வலுவடைந்தது. பெர்சியர்களை ஏதென்ஸ் தோற்கடித்தது. பெர்சியர்களுக்கு எதிரான போருக்கு திரட்டிய ராணுவத்தைக் கொண்டு, பிற கிரேக்க மாநிலங் களை கட்டுப்படுத்தியது.

இந்நிலையில், ஏதென்ஸ் ராணுவத்தின் தளபதியாக பெரிக்ளஸ் என்பவர் பொறுப்பேற்றார்.

கிரேக்க தேசத்தின் எந்த மாநிலத்தைச் சேர்ந்த குற்றவாளிகளாக இருந்தாலும் அவர்கள் மீது ஏதென்ஸ் நீதிமன்றங்களில்தான் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அதுபோல, ஏதென்ஸ் நாணயங்களை மட்டுமே பிற கிரேக்க மாநிலங்கள் அனைத்தும் பயன்படுத்த வேண்டும் என்றும் நிர்ப்பந்தம் செய்தார்.

ஏதென்ஸின் இந்த நிர்ப்பந்தம் இதர மாநிலங்களை வெறுப்புக்கு உள்ளாக்கியது. ஏதென்ஸுக்கு எதிராக பிற மாநிலங்கள் அனைத்தையும் தனது தலைமையின் கீழ் திரட்டியது ஸ்பார்ட்டா.

இதையடுத்து நடைபெற்ற போர் பெலோபொனிஸியன் போர் என்று அழைக்கப்படுகிறது. கி.மு. 431லிருந்து கி.மு. 404 வரை நீடித்த இந்த போர் கிரீஸில் பெரும் அழிவை ஏற்படுத்தியது.

முதலில் ஏதென்ஸ் வெற்றி பெறுவதைப்போன்ற தோற்றம் உருவாகியது. ஏதென்ஸின் சக்திவாய்ந்த கப்பற்படை மத்திய தரைக்கடலை சுற்றி வளைத்து நிறுத்தப்பட்டது. ஆனால், ஏதென்ஸ் மீதான ஸ்பார்ட்டாவின் வெறுப்பு மிகவும் ஆழமானது.

தங்களுடைய முந்தைய எதிரியான பெர்சியர் களுடன் ஸ்பார்ட்டா நிர்வாகம் பேரம் பேசியது. பெர்சியர்களுக்கு நிலத்தைக் கொடுத்து தங்கத்தை வாங்கியது ஸ்பார்ட்டா. அந்த தங்கத்தைக் கொண்டு தங்களுக்கென்று சக்தி வாய்ந்த கப்பற்படைய ஸ்பார்ட்டா உருவாக்கியது.

20 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த இந்த போர் கிரீஸ் தேசத்தின் மாநிலங்களை நார் நாராய் கிழித்தெறிந்தது. கடைசியில் கி.மு. 404ல் ஏதென்ஸை கைப்பற்றியது ஸ்பார்ட்டா.

சரணடையும்படி ஏதென்ஸுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. போரில் ஸ்பார்ட்டா வெற்றி பெற்றாலும், யாரும் வெற்றியை உரிமை கொண்டாடவில்லை.

இந்த போர் காரணமாக கிரேக்க மாநிலங்கள் அனைத்தையும் சேர்ந்த ஏராளமான குடிமக்கள் பலியாகினர். வயல்வெளிகள், திராட்சை தோட்டம், பழத்தோட்டம் என அனைத்தும் அழிந்தன. எல்லா மாநிலத்தின் பொருளாதாரமும் சிதைந்தது.

ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை கிரேக் கர்கள் மத்தியில் அற்றுப்போனது. இந்தப் போர் காரணமாக கிரீஸ் தேசம் நலிவுற்று ஏழ்மையில் சிக்கியது.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மாசிடோனியர்கள் படை யெடுத்து வந்தபோது, தங்களைப் பாதுகாப்பதற்கு கூட அவர்களால் முடியவில்லை. அவர்களுடைய நாகரிகம் வீழ்ச்சி அடைந்தது.

You may also like
அலங்காநல்லூரில் உதயநிதி பிறந்தநாள் விழா!
பேரூராட்சி சுழற்சிமுறை ஒதுக்கீடுகளில் அதிமுக சதி – முதல்வர் கவனிக்க கோரிக்கை
என்னதான் இருந்தாலும் ஜெயலலிதாவைப் போல வருமா?
நிழல்கள் – ஆதனூர் சோழன் கவிதைகள்

Leave a Reply