ரோமானிய பண்பாட்டில், குடும்பங்கள் முக்கியமான பங்கைவகித்தன. குடும்பங்கள் ரோமானிய வாழ்க்கைமுறையின் மையமாக விளங்கின.
ஒவ்வொரு குடும்பத்திலும் தாய், தந்தை, திருமணமாகாத குழந்தைகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர்.
ரோமானிய குடும்பங்களில், தகப்பனது முடிவே இறுதியானது. எவ்வளவு பணத்தை செலவு செய்ய வேண்டும்? எந்த சொத்தை வாங்க வேண்டும். விற்க வேண்டும் என்பதை யும் அவர்தான் தீர்மானிப்பார்.
வீட்டு ஆட்களைக்கூட அடிமைகளாக விற்கவோ அல்லது கொல்லவோ அவருக்கு உரிமை இருந்தது.
பெண்கள் வீட்டு வேலைகளை செய்ய வேண்டும். இவர்கள் சந்தையில் பொருள்கள் வாங்க உரிமை இருந்தது. சில செல்வந்தர் வீட்டு பெண்களுக்கு சொத் துக்கள் வைத்திருக்கவும் உரிமை இருந்தது.
தங்கள் குடும்பத்திற்கும், அரசுக்கும் விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதை தங்கள் குழந்தைகளுக்கு ரோமானியர்கள் கற்பித்தனர். தார்மீக ஒழுக்க நெறிகளுடன் பிறரை மரியாதை யாக நடத்தவும் கற்றுத்தந்தனர்.
சமூகத்தில் மரியாதையுடன் வாழ வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர்.