இத்தாலிய தீபகற்பத்தில் வாழ்ந்த பல்வேறு குழுக்களால், ரோமானியர்களுக்கு அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டே இருந்தது. தங்களை பாதுகாத்துக் கொள்ள, ரோமானியர்கள் வலுவான ராணுவத்தை உருவாக்கத் தொடங்கினர்.
தேவை ஏற்படும் போது ராணுவத்திற்கு உதவ வேண்டும் என்று, அனைத்து ரோமானிய குடிமக்களுக்கும் வலியுறுத் தப்பட்டது. இதன்மூலம் போதுமான அளவுக்கு வீரர்கள் கிடைப்பது உத்தரவாதப் படுத்தப்பட்டது.
அதற்கடுத்து வந்த 250 ஆண்டுகளில் ரோமானியப்படை சிறிது சிறிதாக இத்தாலிய தீபற்பத்தில் இருந்த தங்கள் எதிரி களை முற்றிலுமாக ஒழித்துக் கட்டியது. தீபகற்பத்தின் பெரும் பாலான பகுதியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.
கி.மு. 264ம் ஆண்டில் இத்தாலிய தீபகற்பத்தில், சக்தி வாய்ந்த ஒரே அரசாக ரோம் அரசு திகழ்ந்தது.
ரோமானியர்கள் பிற நாடுகளை கைப்பற்றினாலும், அந்த மக்களுக்கும் அவர்களது விருப்பங்களுக்கும் மரியாதை அளித் தனர்.
உலக வரலாற்றில், அந்த காலகட்டத்தில், வெற்றி பெற்ற உடன் தோல்வியுற்ற நாட்டு மக்களை கொன்று குவித்து அந்த தேசத்தை முற்றிலும் கைப்பற்றுவதே வழக்கமாக இருந்தது. ஆனால், ரோமானியர்கள் தாங்கள் வெற்றிகொண்ட நாட்டின் மக்கள் வாழ்வுக்கு உத்தரவாதம் அளித்தனர்.
அதுமட்டுமில்லாமல், அந்த மக்கள் பின்பற்றிய சமயத்தை தொடர்ந்து பின்பற்றவும், பண்பாடு மற்றும் வாழ்க்கை முறை யைக் கடைப்பிடிக்கவும் அனுமதி அளித்தனர். ரோமானிய குடியுரிமையையும் வழங்கினர்.
இவ்வாறாக, தங்கள் பேரரசு முழுமையும் ஒற்றுமை, விசுவாசம் நிலவச்செய்து, ரோமானி யர்கள் தங்கள் பேரரசை வலுவானதாக கட்டினர்.