Home > அறிவியல் > மனிதகுல வரலாறு – ப்யூனிக் போர்கள்

மனிதகுல வரலாறு – ப்யூனிக் போர்கள்

கி.மு. 264ம் ஆண்டில் இத்தாலிய தீபகற்பத்தின் பெரும்பகுதியை ரோமப் பேரரசு கைப்பற்றியிருந்தது. சர்வதேச அளவில் மிகவும் சக்திவாய்ந்த ராணுவமாக ரோமப் பேரரசின் ராணுவம் உருவாகியிருந்தது. இவர்களுக்கு நிகராக ‘கார்தேஜ்’ வம்சத்தினர் மடடுமே இருந்தனர்.

மத்திய தரைகடலை சுற்றி இருந்த பகுதிகளில் வாழ்ந்த ‘கார்தேஜ்’ இனத்தவர், உலகின் மிகச் சிறந்த கப்பற்படையை உருவாக்கி இருந்தனர். இத்தாலிக்கும், சிசிலிக்கும் இடைப் பட்ட மெசினா நீரிணையை கார்தேஜியர்கள் கைப்பற்றி விடு வார்களோ என்று ரோமானிய ராணுவம் அஞ்சியது.

இதைய டுத்து, ரோமானிய ராணுவத் தலைவர்கள் தங்களது படையை தெற்கே அனுப்பினர். கார்தேஜியன் குடியிருப்பில் பெரும்ப குதி அழிக்கப்பட்டது. கார்தேஜியர்களுடனான போர் கிட் டத்தட்ட 25 ஆண்டுகள் நீடித்தது.

ரோமானிய ராணுவத்தில் காலாட்படை சிறப்பாக இருந்தது. எனினும், கார்தேஜியர் களின் கடற்படை அவர்களுக்கு சவாலாக விளங்கியது. இதனால் ரோமானியர்கள், போர் கப்பல்களை தயாரிக்க துவங்கினர். மேலும் காலாட்படை தந்திரங்களை கடற்படை யிலும் புகுத்தி போர் புரிந்தனர். ரோமானியர்கள் நங்கூரங் களை பயன்படுத்தி கப்பல்களை நிறுத்தி, பிற கப்பல்களில் நுழைந்து, நேரடியாக எதிரிகளுடன் மோதினார்.

கி.மு. 221ல் இளம் கார்தேஜிய தளபதியான ‘ஹனிபால்’ ரோம் மீது மீண்டும் படையெடுத்தார். 40 ஆயிரம் படைவீரர்கள், 40 யானைகளுடன் ஆல்ப்ஸ் மலையைக் கடந்து ரோமாபுரியை கைப்பற்றினார் எதிர்பாராத தோல்வியால், ரோமானியர்களுக்கு அதிக இழப்பு ஏற்பட் டது.

கி.மு. 216ல் ஹனிபால் கிட்டத்திட்ட ரோமானிய ராணு வத்தின் பெரும்பகுதியை அழித்து விட்டார். இருந்தாலும் ரோமானியர்கள் போரை தொடர்ந்தனர். தங்களது தாய்நாட்டை காப்பாற்ற ரோமானிய மக்கள், பேரரசின் எல்லா பகுதி களில் இருந்தும் திரண்டு வந்து கடுமையாக போரிட்டனர்.

கி.மு. 202ல், ரோம பேரரசின் தளபதி ஸ்கிபியோ தலை மையில் ரோமானிய ராணுவம் ஹனிபாலைத் தோற்கடித்தது.

கி.மு. 146ல், கார்தேஜ் மீண்டும் படைபலத்தை பெற்றது. கார்தேஜியர்கள் வலுவான நிலையை எட்டினர். இது ரோமானியர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. ‘கார்தேஜ்’ இனத் தை பூமியிலிருந்து முற்றிலுமாக அழிக்க முடிவெடுத்தனர்.

ரோமானியப்படை, கார்தேஜை கைப்பற்றியது. கார் தேஜிய மக்களை அடிமைகளாக்கி விலைக்கு விற்றது. அவர்களது நிலங்களில் உப்பு தூவப்பட்டது. நிலங்களை மீண்டும் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாமல் செய்தனர். இவ்வா றாக கார்தேஜ் அச்சுறுத்தலை முடிவுக்கு கொண்டுவந்ததும், ப்யூனிக் போர் முடிவுக்கு வந்தது.

You may also like
நிலவில் இறங்க ஒரு முன்னோட்டம் (மே 22, 1969) – History of space exploration
நிலவைச் சுற்றிய மனிதர்கள் (டிசம்பர் 24, 1968) – History of space exploration
மனிதகுல வரலாறு – ஆப்பிரிக்காவில் பாண்டு மக்கள்
மனிதகுல வரலாறு – ஆப்பிரிக்க நாகரிகம்

Leave a Reply