Home > அறிவியல் > மனிதகுல வரலாறு – ரோமில் உள்நாட்டுக் குழப்பம்

மனிதகுல வரலாறு – ரோமில் உள்நாட்டுக் குழப்பம்

சிறு பகுதியாக இருந்த ரோம் அரசு மிகக் குறுகிய காலத்தில் சர்வதேச அளவில் பேரரசாக மாறியது. பல்லாயிரம் மைல் பரப்பளவில் பேரரசின் எல்லை பரந்து விரிந்தது.

பேரரசில் பல்வேறு கலாச்சாரங்களும், மொழிகளும் இடம்பெற்று இருந்தன. நிலப்பரப்பு விரிவடைந்தவுடன் பேரரசை நிர்வகிப்பதும் பாதுகாப்பதும் கடினமாகியது. நாட்டைப் பாதுகாப்பதற்கு போராட வேண்டியிருந்தது.

அமைதியை நிலைநாட்டுவதற்காக பேரரசின் மூலை, முடுக்குக்கெல்லாம் ரோமானியப் படை அனுப்பப்பட்டது. இந்த ராணுவமும், ஊழல் அரசு அதிகாரிகளும் சேர்ந்து மக்களை பெருந் துன்பத்திற்கு உள்ளாக்கினர்.

செல்வத்தையும் நிலத்தையும் இவர்கள் மக்களிடம் இருந்து சுரண்டினர். இதனால் மக்கள் விரக்தியின் விளிம்புக்குச் சென்றனர்.

பணக்கார ரோமானியர்களால், விவசாயம் செய்பவர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டனர். இவர்களுக்கு சரியான கூலியும் தரப்படவில்லை. மேலும், இவர்கள் விளைவித்த தானியங்களுக்கு மிகக் குறைவான விலை நிர்ணயிக்கப் பட்டது. இதனால், ரோமானிய விவசாயிகள் விவசாயத்தைக் கைவிட்டனர்.

வறுமையால் வாடிய அவர்கள் நகரங்களுக்கு குடிபெயரத் துவங்கினர். கேளிக்கை நிகழ்ச்சிக்கு வசூலிக்கப் படும் தொகையைவிட ஒரு துண்டு ரொட்டியின் விலை அதிகமாக இருந்தது. இதையடுத்து, தங்களுக்கு மலிவு விலையில் உணவும், இலவச கேளிக்கை நிகழ்ச்சிகளையும் வழங்குவ தாக உறுதியளிக்கும் தலைவர்களுக்கு வாக்களிக்க, ரோமானியர்கள் முடிவு செய்தனர்.

லஞ்சமும், வறுமையும் அதிகரித்தது. நாட்டில் குழப்பமான நிலை நீடித்தது. குற்றங்களை தடுத்து, நிலமற்ற விவசாயிக ளுக்கு நிலம் வழங்கி மாற்றத்தை ஏற்படுத்த பல தலைவர்கள் நினைத்தனர். அத்தகைய முயற்சியில் ஈடுபட்ட தலைவர்கள் செனட் உறுப்பினர்களால் கொலை செய்யப்பட்டனர்.

கி.மு.107ல், கெய்யஸ் மாரியஸ் என்பவர் நகர்மன்ற உறுப் பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஏழைகளை படை வீரர்களாக நியமித்து, சம்பளம் வழங்கினார். பதவிக்காலம் முடிந்ததும் நிலம் வழங்குவதாக வாக்குறுதி அளித்தார். முதன் முறையாக ராணுவத்திற்கு மரியாதை கிடைக்கத் தொடங்கியது.

You may also like
மனிதகுல வரலாறு – ஆப்பிரிக்காவில் பாண்டு மக்கள்
மனிதகுல வரலாறு – ஆப்பிரிக்க நாகரிகம்
வெள்ளிக் கோளில் அமெரிக்க விண்கலம் (அக்டோபர் 19,1967) – History of space exploration
வெள்ளிக் கோளில் சோவியத் விண்கலம் (அக்டோபர் 18, 1967) – History of space exploration

Leave a Reply