Home > அறிவியல் > மனிதகுல வரலாறு – ஜூலியஸ் சீசர்

மனிதகுல வரலாறு – ஜூலியஸ் சீசர்

கி.மு. 60ல் இளம் லட்சிய வீரானான ஜூலியஸ் சீசர் அரசியலில் நுழைந்தார். போர்க்களத்தில் வெற்றிகரமான தளபதியாக திகழ்ந்தவர் சீசர். ரோமாபுரியின் எல்லைகளை விரிவுபடுத்தியவர்.

ஜூலியஸ் சீசர் தனது படைபலத்தால் ரோம குடியரசுக்கு ஆபத்து எற்படுத்துவாரோ என்ற அச்சம் செனட் உறுப்பினர் களுக்கு ஏற்பட்டது. படை நடத்திக் கொண்டிருந்த சீசரை உடனே ரோமுக்கு திரும்பும்படி செனட் சபை உத்தரவிட் டது.

ராணுவத்தை ரூபிகன் ஆற்றுப் பகுதியில் நிறுத்திவிட்டு ரோமிற்கு திரும்புமாறு பணித்தது. ஆனால், அவர்களது அதிகாரத்திற்கு அடிபணிய மறுத்த ஜூலியஸ்சீசர், ரூபிகன் ஆற்றைகடந்து ‘செனட்’ கட்டளையை நிராகரித்தார். இதைய டுத்து அவர்மீது தேசத்துரோக குற்றம் சுமத்தப்பட்டது. சீசர் மீது குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து ரோமப் பேரர சில் உள்நாட்டுப் போர் மூண்டது.

போரில் தன்னை எதிர்த்தவர்களை தோற்கடித்தார் சீசர். கி.மு.45ல் ரோம பேரரசை முழு மையாக தனது கட்டுப் பாட்டின் கீழ் கொண்டு வந்தார்.

சிறந்த மதி நுட்பத்துடன் திகழ்ந்த சீசர், சிறந்த முறையில் ஆட்சி செலுத்தினர். மக்களுக்கு வேலைவாய்ப்பு, ஏழைகளுக்கு நிலம் வழங்குதல் போன்ற மாறுதல்களை செய்து மறு மலர்ச்சியை ஏற்படுத்தினார். சீசரின் ஆட்சிக் காலம் மிகக் குறுகியது. கி.மு.44ல் ஜூலியஸ் சீசரால் ரோமானிய பேரரசுக்கு அழிவு நேரிடும் என செனட் உறுப்பினர்கள் வற்புறுத்தினர்.

இதையடுத்து சதித்திட்டம் தீட்டப்பட்டது. சீசரின் வான ளாவிய அதிகாரத்தை ஒடுக்குவதற்காக அவருடைய நண்ப ராக இருந்த புரூட்டஸ் மற்றும் கெய்யஸ் காசியஸ் உள்ளிட்ட செனட் உறுப்பினர்களால் கொல்லப்பட்டார். சீசருக்கு மக்கள் ஆதரவு இருந்தது. செல்வந்தர்களின் செனட் சபை ஆத ரவு இல்லை. எனவே, மாவீரன் சீசர் மடிந்தார்.

You may also like
மனிதகுல வரலாறு – ஆப்பிரிக்காவில் பாண்டு மக்கள்
மனிதகுல வரலாறு – ஆப்பிரிக்க நாகரிகம்
வெள்ளிக் கோளில் அமெரிக்க விண்கலம் (அக்டோபர் 19,1967) – History of space exploration
வெள்ளிக் கோளில் சோவியத் விண்கலம் (அக்டோபர் 18, 1967) – History of space exploration

Leave a Reply