Home > அறிவியல் > மனிதகுல வரலாறு – முக்கூட்டு அரசு

மனிதகுல வரலாறு – முக்கூட்டு அரசு

ஜூலியஸ் சீசரின் மறைவுக்குப் பின் ரோமானிய பேரரசு மூன்று நாடுகளாகப் பிரிக்கப்பட்டு, சீசரின் 3 படைத்தளபதிகளான ஆக்டேவியன், மார்க் ஆண்டனி மற்றும் மார்கஸ் லெபிடஸ் ஆகியோரால் ஆட்சி செய்யப்பட்டது. இவர்கள் மூவரும் மூவேந்தர்கள் எனப்பட்டனர். அவரவர் எல்லைக்குட்பட்ட பகுதியில் அவர்களுக்கு முழு அதிகாரம் இருந்தது.

இருப்பினும், இந்த அரசுகள் நீண்டகாலம் நீடிக்கவில்லை. லெபிடசை நிர்ப்பந்தப் படுத்திய ஆக்டேவியன் அவரை பொது வாழ்வில் இருந்து ஒய்வு பெறச் செய்தார். பிறகு, மார்க் ஆண்டணிக்கு எதிராக உள்நாட்டுக் கலகத்தை ஏற்படுத்த தயாரானார்.

ஆண்டனியோ, எகிப்திய இளவரசி கிளியோபாட்ராவின் காதல் வலையில் வீழ்ந்து அவரை மணந்தார். ரோமை கைப்பற்ற ஆண்டனி திட்டமிட்டிருப்பதாக பிரசாரம் செய்த அக்டேவியன், அதை மக்கள் நம்பும்படி செய்தார். ரோம் அரசு விவகாரங்களில் எகிப்திய ஆட்சியாளர்களை பொறுப் பேற்கும்படி செய்தார். ரோமானிய குடியரசின் சார்பில் ஆண்டனிக்கு எதிராக போர்ப்பிரகடனம் செய்தார் ஆக்டேவியன்.

கி.மு.31ல், ‘கிரீஸ்’ நகரில் நடைபெற்ற போரில் மார்க் ஆண்டனியை தோற்கடித்தார் ஆக்டேவியன். ஆக்டேவியனிடம் போர்க்கைதியாக பிடிபடுவதை தவிர்க்க, ஆண்டனி யும், கிளியோபாட்ராவும் தற்கொலை செய்து கொண்டனர்.

இதன்பிறகு ஆக்டேவியனை எதிர்க்க எதிரிகள் யாரும் இல்லை. ரோமக் குடியரசு மிகச் சிறிய நாடாக மாறியது. பரந்து விரிந்த பேரரசை நிர்வகிக்கும் ஆற்றல் அதற்கு இல்லை.

தனது குடியரசை சீரமைத்து விரிவுபடுத்துவதற்கு பதிலாக, அதிகாரமிக்க தலைவர் ஒருவரை நியமிக்கும்படி செனட் சபைக்கு பரிந்துரைத்தார் ஆக்டேவியன். அவரது பரிந்து ரையை ஏற்று, ஆக்டேவியனை நாட்டின் தலைவராக நியமித்தது செனட் சபை. ரோமின் தன்னிகரில்லாத தலைவராக சாகும்வரை பதவிவகித்தார் ஆக்டேவியன்.

You may also like
இரண்டாவது பயணமும் வெற்றி (நவம்பர் 19, 1969) – History of space exploration
நிலவில் மனிதன் (ஜூலை 16, 1969) – History of space exploration
நிலவில் இறங்க ஒரு முன்னோட்டம் (மே 22, 1969) – History of space exploration
நிலவைச் சுற்றிய மனிதர்கள் (டிசம்பர் 24, 1968) – History of space exploration

Leave a Reply