Home > அறிவியல் > மனிதகுல வரலாறு – ஜூலியன் பேரரசர்கள்

மனிதகுல வரலாறு – ஜூலியன் பேரரசர்கள்

அகஸ்டஸ் சீசர் மரணமடைந்த பின்னர், ரோம் பேரரசை நான்கு பேரரசர்கள் ஆட்சி செய்தனர். இவர்கள் அனைவரையும் ஜூலியன் பேரரசர்கள் என்று வரலாற்று அறிஞர்கள் அழைக்கின்றனர். இதற்கு காரணம் இருக்கிறது. அதாவது, இவர்கள் அனைவருமே, ஜூலியஸ் சீசருடன் ஏதாவது ஒருவகையில் தொடர்பு உள்ளவர்கள்.

அகஸ்டஸ் சீசரைத் தொடர்ந்து ரோம் பேரரசின் தலைவராக டைபீரியஸ் பதவி யேற்றார். இவர் அகஸ்டஸ் சீசரின் தத்துப் பிள்ளையாவார். இவர் பொறாமையும் குரூர சிந்தனையும் மிக்கவர். தனக்கு எதிராக செயல்பட்டதாக கூறி ஏராளமான அப்பாவிகள் மீது தேசத்துரோக குற்றம் சுமத்தி பழிவாங் கினார்.

டைபீரியஸைத் தொடர்ந்து அவருடைய பேரன் உறவு கொண்ட கலிகுலா என்பவர் பொறுப்பேற்றார். இவர் மன நிலை பாதிக்கப்பட்டவர். தலைமைப் பண்பும் ஆற்றலும் இல்லாதவர். இதையடுத்து அவருடைய சொந்த பாதுகாவலர் ஒருவரால் கொல்லப்பட்டார்.

கலிகுலாவின் மரணத்தைத் தொடர்ந்து, கிளாடியஸ் என்பவர் பதவிக்கு வந்தார். இவர் திறமையில்லாதவர். ஆடம்பர வாழ்க்கை வாழவேண்டும் என்ற விருப்பம் கொண்டவர். பேரரசை நிர்வகிப்பதில் கவனம் செலுத்த தவறிவிட்டார்.

இவரைத் தொடர்ந்து பதவிக்கு வந்தவர்தான் நீரோ. ரோம் எரிகிறபோது பிடில் வாசித்த கொடுங்கோல் மன்னர் இவர் தான்.

இசை ஆர்வம் மிக்கவராக இருந்தாலும் மிகவும் குரூரமானவராக செயல்பட்டார். குதிரைப் பந்தயத்திலும் இசையிலும் கொண்ட ஆர்வத்தால், ரோம் பேரரசை கிட்டத்தட்ட திவாலாக்கி விட்டார் என்று இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

You may also like
இரண்டாவது பயணமும் வெற்றி (நவம்பர் 19, 1969) – History of space exploration
நிலவில் மனிதன் (ஜூலை 16, 1969) – History of space exploration
நிலவில் இறங்க ஒரு முன்னோட்டம் (மே 22, 1969) – History of space exploration
நிலவைச் சுற்றிய மனிதர்கள் (டிசம்பர் 24, 1968) – History of space exploration

Leave a Reply